Oct 3, 2013

பருத்தித்துறை வடை



பருத்தித்துறை வடையே – வடலிப்
பனங்கள்ளுக்குத் துணையே
சந்தியிலே கடையே – பத்துச்
சதத்துக்கொரு வடையே!
ஸொய்... ஸொய்... ஸொய்...!

ஆச்சியின் உள்ளங்கையில் மாவானாய்
அடுப்பினிலே கொதிக்கும் நெய்யில் பொன்னானாய்
பருப்புகளை நொருக்கும்போது பாகானாய்
பல்லிடுக்கில் புகுந்துகொண்டால் நோவானாய்!

பருத்தித்துறை வடையே...

வயிரவரின் கழுத்தில் தொங்கும் உழுந்து வடை
வடலியிலே ஏற்றம்தரும் ஆச்சி வடை
கடற்கரையில் வாங்கித்தின்போம் கடலை வடை
கோப்பறேசன்* வாசலிலே பழைய வடை!

பருத்தித்துறை வடையே...

பெட்டியிலே போட்டு வைத்தால் கல்லாகும்
போத்தலிலே மூடி வைத்தால் முறுக்காகும்
சுட்டவுடன் சுவைத்தாலே சொர்க்கமன்றோ – கள்ளுக்குச்
சுதிசேர்க்கும் வடை ருசிக்கு இணையுமுண்டோ!

பருத்தித்துறை வடையே...

---------------

No comments:

Post a Comment