Feb 20, 2013

ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்



புத்தர் பெருமானே!
தெருவெல்லாம் நீ
தியானத்தில் இருக்கிறாய், உனது
தேசமோ
தீப்பற்றி எரிகிறது.

உனது
பல்லைப் புதைத்த இடத்தில் உனது
போதனைகளையும் புதைத்துவிட்டார்கள்.

உன்மீது
அரசியல் சாயம் பூசியதால்
உனது உடை மட்டுமல்ல
உபதேசங்களும்
அவலட்சணாமாகிவிட்டன!

இனி நீ
கண்ணைத் திறந்தாலும்
இவர்கள்
கண்டுகொள்ளப்போவதில்லை.

அன்று நீ
பிச்சைப் பாத்திரம் ஏந்தினாய்
இன்று
பிச்சைப் பாத்திரமே இவர்களின்
தேசிய அடையாளமாகிவிட்டது.

இவர்கள் கடன் வாங்காத நாடு
இனிமேல்தான் பிறக்கவேண்டும்.

இவர்களிடம் அடைவு வைக்க
சுதந்திரம் மட்டுமே இருந்தது
இப்போது
அதுவும் பறிபோய்விட்டது.

சீனா
செல்வத்தைச் சுரண்டுகிறது
இந்தியா
இதயத்தையே சுரண்டுகிறது!

000

நோயின் பிடியில்
நலிந்தவரைக் கண்டு
சிந்தை கலங்கிய
சித்தார்த்தனே!

நீ அரச பதவியைத் துறந்து
துறவறம் பூண்டாய்
இவர்களோ
துறவறம் பூண்டு
அரசியலுக்கு வந்தார்கள்.

நீ போதித்த
அன்பையும் அகிம்சையையும்
அநாதையாக்கிவிட்டு
ஆயுதங்களுக்கு அர்ச்சனை செய்கிறார்கள்.

அடக்குமுறை ஆட்சியில்
அன்றாடம் மனிதர்கள்
இலகுவாய்க்
காணாமல்போகிறார்கள்.

வன்னிக் காடுகளில்
புதை குழிகளின்மேல்
போதிமரங்களை நடுகிறார்கள்.

குருதி வடியும் கையோடு உன்னைக்
கும்பிட வருவதால்
குற்றங்கள் மன்னிக்கப்பட்டதாகக்
குதூகலமடைகிறார்கள்.

தேசியக் கொடியில்
மிருகத்தைப் பறக்கவிட்டதால்
மிருகமாகவே மாறிவிட்டார்கள்

சீவகாருண்யம் இங்கே
சீனத்துச் சரக்காகிவிட்டது,
அகிம்சை என்பது
அங்காடிகளில் தொங்குகிறது.

ஆயுதங்களை
இறக்குமதி செய்து
அகதிகளை
ஏற்றுமதி செய்கிறார்கள்.

புத்தர் பெருமானே நீ
சிலையாய் இருப்பதனால்தான்
இங்கே உன் போதனைகளை
விலை பேசுகிறார்கள்.

000

ஒருகால் அமைதியும் அழகும்
ஆட்சி செய்த உன்
மண்ணை மிதிக்கும்போதெல்லாம்
மனம் நொந்துபோகிறேன்.

ஆற்றாமையால்
என் இதயம்
இடிந்த சுவராகிறது.

தேசபிதா தோன்றாத நாட்டில்
தான்தோன்றித் தலைவர்கள்
துள்ளிவிளையாடுகிறார்கள்.

நீதிமன்றங்களின்
அத்திவாரமே
ஆட்டம்கண்டுவிட்டது.

கறுப்புச் சட்டைகளுக்குள்
காடையர்கள் புகுந்து கொண்டார்கள்.

செருப்பில்லாமல்
நடப்பவனின் காலில்
சேறு மட்டுமல்ல
இந்த நாட்டின்
சீரழிவும் ஒட்டிக்கொள்கிறது.

இது நாடல்ல
நாகரிக உலகத்தின்
சாபக் கேடு!

எங்கெல்லாம் மண்
மனிதர்களால்
மிதிக்கப்படுகிறதோ
அங்கெல்லாம்
மனிதர்கள் மனிதர்களால்
மதிக்கப்படவேண்டும்.

ஆனால் இங்கே
மனிதர்களும்
மிதிக்கப்படுகிறார்கள்!

கருணை மிகுந்த கௌதமரே
உனக்குள்ளேயெ நீ அழுவது
உலகமெல்லாம் கேட்கிறது.

இன்னும் சில மாதங்களில்
உனது ஜயந்தி தினம்!
அன்றாவது இவர்கள்
ஆயுதங்களை எறிந்துவிட்டு
அகிம்சையை அணிவார்களா?

ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்



புத்தர் பெருமானே!
தெருவெல்லாம் நீ
தியானத்தில் இருக்கிறாய், உனது
தேசமோ
தீப்பற்றி எரிகிறது.

உனது
பல்லைப் புதைத்த இடத்தில் உனது
போதனைகளையும் புதைத்துவிட்டார்கள்.

உன்மீது
அரசியல் சாயம் பூசியதால்
உனது உடை மட்டுமல்ல
உபதேசங்களும்
அவலட்சணாமாகிவிட்டன!

இனி நீ
கண்ணைத் திறந்தாலும்
இவர்கள்
கண்டுகொள்ளப்போவதில்லை.

அன்று நீ
பிச்சைப் பாத்திரம் ஏந்தினாய்
இன்று
பிச்சைப் பாத்திரமே இவர்களின்
தேசிய அடையாளமாகிவிட்டது.

இவர்கள் கடன் வாங்காத நாடு
இனிமேல்தான் பிறக்கவேண்டும்.

இவர்களிடம் அடைவு வைக்க
சுதந்திரம் மட்டுமே இருந்தது
இப்போது
அதுவும் பறிபோய்விட்டது.

சீனா
செல்வத்தைச் சுரண்டுகிறது
இந்தியா
இதயத்தையே சுரண்டுகிறது!

000

நோயின் பிடியில்
நலிந்தவரைக் கண்டு
சிந்தை கலங்கிய
சித்தார்த்தனே!

நீ அரச பதவியைத் துறந்து
துறவறம் பூண்டாய்
இவர்களோ
துறவறம் பூண்டு
அரசியலுக்கு வந்தார்கள்.

நீ போதித்த
அன்பையும் அகிம்சையையும்
அநாதையாக்கிவிட்டு
ஆயுதங்களுக்கு அர்ச்சனை செய்கிறார்கள்.

அடக்குமுறை ஆட்சியில்
அன்றாடம் மனிதர்கள்
இலகுவாய்க்
காணாமல்போகிறார்கள்.

வன்னிக் காடுகளில்
புதை குழிகளின்மேல்
போதிமரங்களை நடுகிறார்கள்.

குருதி வடியும் கையோடு உன்னைக்
கும்பிட வருவதால்
குற்றங்கள் மன்னிக்கப்பட்டதாகக்
குதூகலமடைகிறார்கள்.

தேசியக் கொடியில்
மிருகத்தைப் பறக்கவிட்டதால்
மிருகமாகவே மாறிவிட்டார்கள்

சீவகாருண்யம் இங்கே
சீனத்துச் சரக்காகிவிட்டது,
அகிம்சை என்பது
அங்காடிகளில் தொங்குகிறது.

ஆயுதங்களை
இறக்குமதி செய்து
அகதிகளை
ஏற்றுமதி செய்கிறார்கள்.

புத்தர் பெருமானே நீ
சிலையாய் இருப்பதனால்தான்
இங்கே உன் போதனைகளை
விலை பேசுகிறார்கள்.

000

ஒருகால் அமைதியும் அழகும்
ஆட்சி செய்த உன்
மண்ணை மிதிக்கும்போதெல்லாம்
மனம் நொந்துபோகிறேன்.

ஆற்றாமையால்
என் இதயம்
இடிந்த சுவராகிறது.

தேசபிதா தோன்றாத நாட்டில்
தான்தோன்றித் தலைவர்கள்
துள்ளிவிளையாடுகிறார்கள்.

நீதிமன்றங்களின்
அத்திவாரமே
ஆட்டம்கண்டுவிட்டது.

கறுப்புச் சட்டைகளுக்குள்
காடையர்கள் புகுந்து கொண்டார்கள்.

செருப்பில்லாமல்
நடப்பவனின் காலில்
சேறு மட்டுமல்ல
இந்த நாட்டின்
சீரழிவும் ஒட்டிக்கொள்கிறது.

இது நாடல்ல
நாகரிக உலகத்தின்
சாபக் கேடு!

எங்கெல்லாம் மண்
மனிதர்களால்
மிதிக்கப்படுகிறதோ
அங்கெல்லாம்
மனிதர்கள் மனிதர்களால்
மதிக்கப்படவேண்டும்.

ஆனால் இங்கே
மனிதர்களும்
மிதிக்கப்படுகிறார்கள்!

கருணை மிகுந்த கௌதமரே
உனக்குள்ளேயெ நீ அழுவது
உலகமெல்லாம் கேட்கிறது.

இன்னும் சில மாதங்களில்
உனது ஜயந்தி தினம்!
அன்றாவது இவர்கள்
ஆயுதங்களை எறிந்துவிட்டு
அகிம்சையை அணிவார்களா?