Aug 2, 2016

ஜீவநதி, 95. ஆவணி 2016

ராஜாஜி ராஜகோபாலனின்
குதிரை இல்லாத ராஜகுமாரன்

பருத்தித்துறை புலோலியில் முகிழ்ந்து கனடாவை இப்போது தனது வாழ்விடமாகக் கொண்ட ராஜாஜி ராஜகோபாலன் எழுதிய “குதிரை இல்லாத ராஜகுமாரன்” சிறுகதைத்தொகுப்பு பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது. ராஜாஜி ராஜகோபாலன் அவர்கள் 2014 இல் “ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்” என்ற கவிதைத் தொகுப்பொன்றையும் வெளியிட்டுள்ளார். காலச்சுவடுகள் கண்ணனின் சுதர்ஸன் புக்ஸ் மூலம் பதிப்பிக்கப்பட்ட “குதிரை இல்லாத ராஜகுமாரன்” தொகுதிக்கு ஈழத்தின் சிறுகதை ஆளுமைகளில் மிக முக்கிய மேதாவளியான குப்பிழான் ஐ. சண்முகன் நட்புரையினை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வசீகரமான அட்டைப் படத்தோடு களிற்றுத்தந்தரக காகிதத்தில் அச்சாகி வாசிக்கத் தூண்டும் வகையிலே அமைந்துள்ளது.

ஆண்-பெண் உறவுகளை மைய நீரோட்டமாகக் கொண்டே பெரும்பான்மைக் கதைகள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பண்பாட்டின் போலிமைகளைத் துகிலுரியும் நோக்கோடும் எழுதப்பட்டுள்ளமை வெளிப்படையாகத் தெரிகிறது. தத்துவ விசாரணைகளும், நீதிபோதனைகளும் விரவியவாறு கதைகளை நகர்த்திச் செல்கிறார். ராஜாஜி ராஜகோபாலனின் தனித்துவமான முத்திரையினை வருணனைகளில் இனங்காணமுடிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் வாசகனில் பூரணமாகச் சுவறும் வகையில் அலாதியாக வருணித்துச் செல்கின்றார். “பத்தியம்” சிறுகதையானது அகிலமயமாக்கலினால் கிராமியத் தொழில்கள் நலிந்து போனமை குறித்து அங்கலாய்க்கிறது. மிகமுக்கிய செய்தியினை மேலும் விரிவான பரிமாணத்தை எய்தியிருந்தால் இக்கதை இன்னொரு பரிமாணத்தை எய்தியிருக்கும் எனினும் இத்தகைய கதைக்கருவினை சிந்தித்தமைக்காகவே கதாசிரியர் விதந்து பாராட்டப்பட வேண்டியவராகிறார்.

“குதிரை இல்லாத ராஜகுமாரன்”, “அந்த ஒருவனைத் தேடி”, “தெற்காலை போற ஒழுங்கை” போன்ற கதைகளில் தமிழ்த்திருமண உறவுகள் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. பெண் தேடும் படலத்தினை மறுவிசாரணை செய்கின்றன. திருமணச் சடங்கின் பின்புலத்திலுள்ள உபநிகழ்வுகளை கேள்விக்குட்படுத்துகின்றன. “மேலும் சில கேள்விகள்”, நிழலைத் தேடும் நிழல்கள்” என்னும் இரு கதைகளும் தமிழ் சினிமா இறுதிக் காட்சித் துண்டுகள் போலவே தென்படுகின்றன. “மேலும் சில கேள்விகள்” கதையில் இடம்பெறும் சுருதி என்னும் கதாபாத்திரம் தமிழ்ச் சமூகத்தின் யதார்த்தத்திலிருந்து புறந்தள்ளிப்போயுள்ளதாக எனக்குப் படுகிறது. இன்மையில் இத்தகு கதாபாத்திர இருப்பினை நாடும் கதாசிரியரின் வேணவாவின் வெளிப்பாடாகவே கருதமுடிகிறது.

“பௌருஷம்”, ஆதலினால் காமம் செய்வீர்” என்பன காமத்தின் வடிகால் இயற்கையாகக் காணப்படவேண்டும் எனவும், இயல்பான கருத்தாடலுக்கான விடங்களாக அதனைக் கொள்ள வேண்டுமெனவும் வெளிப்படுத்துகின்றன. புதுமைப்பித்தனின் “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” ஜெயகாந்தனின் “நிந்தாங் துதி” “கடவுளும் கோபாலபிள்ளையும்” அமைந்துள்ளது.

ராஜாஜி ராஜகோபாலனின் மொழியாட்சி அவரது பலத்தின் உச்சமாகும். “நிறுதூழி” போன்ற வட்டார வழக்குகள் அற்புதமாகக் கையாளப்பட்டுள்ளதோடு, நுட்பமான உவமைகளும் ஆங்காங்கே விரவியுள்ளன. முன்பின் அறியாத கதாபாத்திரங்களின் அலைவரிசை ஒரே மையப்புள்ளியில் துரிதமாகக் குவிவதை இவர் கதைகளில் பல இடங்களில் தரிசிக்கக் கூடியதாகவுள்ளது. பெண்மையின் மேன்மைபற்றிப் பேசவிரும்பும் கதைகளில்கூட “பெண்மையை” இழிவுபடுத்துவது இவரது பலவீனங்களில் ஒன்றேனக் குறிப்பிடலாம். “கறுத்தக் கொழும்பான்” சிறுகதையில் “செல்வராசா தனது இடுப்பைச் சுற்றி வளைத்திருந்த கைகளில் தான் ஆடு போல் அகப்பட்ட இனிமையான வேளையை என்னமாய் அனுபவித்தாள் என்பதை விஷயமறிந்தவர்கள்தான் அனுமானிக்க முடியும்” என்று சரசுவதி பற்றிக் குறிப்பிடுகிறார். இந்நிகழ்வு நடந்த நாளிலேதான் சசுவதியின் கணவன் பிணமாகக் கிடக்கிறான். அவள் கிணற்றுக்குள்ளே குதிக்க முயல்கிறாள். அப்போது செல்வராசா அவளை காப்பாற்ற அவளைத் தூக்கித் தற்கொலையைத் தடுக்கிறான். இந்நேரத்தில் பிணத்தின் அருகே மனைவி பிறிது ஒருவனின் தொடுகையின் கிளுகிளுப்பினை உணர்கிறாள் என்பது பெண்மையை வெறுமனே போகப்பொருளாக மட்டும் கருதும் மனோ நிலையே ஆகும். இத்தகைய தவறுகளை நீக்கிவிட்டு நோக்கினால் “குதிரை இல்லாத ராஜகுமாரன்” சிறுகதைத் தொகுப்பானது அற்புதமான வாசிப்பு அனுபவங்களைத் தருமென்பதி எதுவிதமான ஐயமுமில்லை.
---- 