Aug 2, 2016

ஜீவநதி, 95. ஆவணி 2016

ராஜாஜி ராஜகோபாலனின்
குதிரை இல்லாத ராஜகுமாரன்

பருத்தித்துறை புலோலியில் முகிழ்ந்து கனடாவை இப்போது தனது வாழ்விடமாகக் கொண்ட ராஜாஜி ராஜகோபாலன் எழுதிய “குதிரை இல்லாத ராஜகுமாரன்” சிறுகதைத்தொகுப்பு பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது. ராஜாஜி ராஜகோபாலன் அவர்கள் 2014 இல் “ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்” என்ற கவிதைத் தொகுப்பொன்றையும் வெளியிட்டுள்ளார். காலச்சுவடுகள் கண்ணனின் சுதர்ஸன் புக்ஸ் மூலம் பதிப்பிக்கப்பட்ட “குதிரை இல்லாத ராஜகுமாரன்” தொகுதிக்கு ஈழத்தின் சிறுகதை ஆளுமைகளில் மிக முக்கிய மேதாவளியான குப்பிழான் ஐ. சண்முகன் நட்புரையினை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வசீகரமான அட்டைப் படத்தோடு களிற்றுத்தந்தரக காகிதத்தில் அச்சாகி வாசிக்கத் தூண்டும் வகையிலே அமைந்துள்ளது.

ஆண்-பெண் உறவுகளை மைய நீரோட்டமாகக் கொண்டே பெரும்பான்மைக் கதைகள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பண்பாட்டின் போலிமைகளைத் துகிலுரியும் நோக்கோடும் எழுதப்பட்டுள்ளமை வெளிப்படையாகத் தெரிகிறது. தத்துவ விசாரணைகளும், நீதிபோதனைகளும் விரவியவாறு கதைகளை நகர்த்திச் செல்கிறார். ராஜாஜி ராஜகோபாலனின் தனித்துவமான முத்திரையினை வருணனைகளில் இனங்காணமுடிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் வாசகனில் பூரணமாகச் சுவறும் வகையில் அலாதியாக வருணித்துச் செல்கின்றார். “பத்தியம்” சிறுகதையானது அகிலமயமாக்கலினால் கிராமியத் தொழில்கள் நலிந்து போனமை குறித்து அங்கலாய்க்கிறது. மிகமுக்கிய செய்தியினை மேலும் விரிவான பரிமாணத்தை எய்தியிருந்தால் இக்கதை இன்னொரு பரிமாணத்தை எய்தியிருக்கும் எனினும் இத்தகைய கதைக்கருவினை சிந்தித்தமைக்காகவே கதாசிரியர் விதந்து பாராட்டப்பட வேண்டியவராகிறார்.

“குதிரை இல்லாத ராஜகுமாரன்”, “அந்த ஒருவனைத் தேடி”, “தெற்காலை போற ஒழுங்கை” போன்ற கதைகளில் தமிழ்த்திருமண உறவுகள் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. பெண் தேடும் படலத்தினை மறுவிசாரணை செய்கின்றன. திருமணச் சடங்கின் பின்புலத்திலுள்ள உபநிகழ்வுகளை கேள்விக்குட்படுத்துகின்றன. “மேலும் சில கேள்விகள்”, நிழலைத் தேடும் நிழல்கள்” என்னும் இரு கதைகளும் தமிழ் சினிமா இறுதிக் காட்சித் துண்டுகள் போலவே தென்படுகின்றன. “மேலும் சில கேள்விகள்” கதையில் இடம்பெறும் சுருதி என்னும் கதாபாத்திரம் தமிழ்ச் சமூகத்தின் யதார்த்தத்திலிருந்து புறந்தள்ளிப்போயுள்ளதாக எனக்குப் படுகிறது. இன்மையில் இத்தகு கதாபாத்திர இருப்பினை நாடும் கதாசிரியரின் வேணவாவின் வெளிப்பாடாகவே கருதமுடிகிறது.

“பௌருஷம்”, ஆதலினால் காமம் செய்வீர்” என்பன காமத்தின் வடிகால் இயற்கையாகக் காணப்படவேண்டும் எனவும், இயல்பான கருத்தாடலுக்கான விடங்களாக அதனைக் கொள்ள வேண்டுமெனவும் வெளிப்படுத்துகின்றன. புதுமைப்பித்தனின் “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” ஜெயகாந்தனின் “நிந்தாங் துதி” “கடவுளும் கோபாலபிள்ளையும்” அமைந்துள்ளது.

ராஜாஜி ராஜகோபாலனின் மொழியாட்சி அவரது பலத்தின் உச்சமாகும். “நிறுதூழி” போன்ற வட்டார வழக்குகள் அற்புதமாகக் கையாளப்பட்டுள்ளதோடு, நுட்பமான உவமைகளும் ஆங்காங்கே விரவியுள்ளன. முன்பின் அறியாத கதாபாத்திரங்களின் அலைவரிசை ஒரே மையப்புள்ளியில் துரிதமாகக் குவிவதை இவர் கதைகளில் பல இடங்களில் தரிசிக்கக் கூடியதாகவுள்ளது. பெண்மையின் மேன்மைபற்றிப் பேசவிரும்பும் கதைகளில்கூட “பெண்மையை” இழிவுபடுத்துவது இவரது பலவீனங்களில் ஒன்றேனக் குறிப்பிடலாம். “கறுத்தக் கொழும்பான்” சிறுகதையில் “செல்வராசா தனது இடுப்பைச் சுற்றி வளைத்திருந்த கைகளில் தான் ஆடு போல் அகப்பட்ட இனிமையான வேளையை என்னமாய் அனுபவித்தாள் என்பதை விஷயமறிந்தவர்கள்தான் அனுமானிக்க முடியும்” என்று சரசுவதி பற்றிக் குறிப்பிடுகிறார். இந்நிகழ்வு நடந்த நாளிலேதான் சசுவதியின் கணவன் பிணமாகக் கிடக்கிறான். அவள் கிணற்றுக்குள்ளே குதிக்க முயல்கிறாள். அப்போது செல்வராசா அவளை காப்பாற்ற அவளைத் தூக்கித் தற்கொலையைத் தடுக்கிறான். இந்நேரத்தில் பிணத்தின் அருகே மனைவி பிறிது ஒருவனின் தொடுகையின் கிளுகிளுப்பினை உணர்கிறாள் என்பது பெண்மையை வெறுமனே போகப்பொருளாக மட்டும் கருதும் மனோ நிலையே ஆகும். இத்தகைய தவறுகளை நீக்கிவிட்டு நோக்கினால் “குதிரை இல்லாத ராஜகுமாரன்” சிறுகதைத் தொகுப்பானது அற்புதமான வாசிப்பு அனுபவங்களைத் தருமென்பதி எதுவிதமான ஐயமுமில்லை.
---- 

Mar 29, 2016

An Introduction by K.S. Sivakumaran

A short introduction to my recent book by K.S. Sivakumaran appeared in Impulse Section of Ceylon Daily Mirror on March 28, 2016.

Thanks Siva, for your words of wisdom.

Mar 10, 2016

ராஜாஜி ராஜகோபாலன் படைத்த சிறுகதைத் தொகுப்பு ~ ‘குதிரை இல்லாத ராஜகுமாரன்’ [2015]

- மதிப்பீடு: ‪‎புதுச்சேரி கலாவதி பசுபதி‬ (தேவமைந்தன்)

கனடாவில் வாழும் சட்டத் துறையில் பட்டம் பெற்ற ராஜாஜி ராஜகோபாலன் ஓர் ஈழத் தமிழர். முரட்டுத்தனமான ஆணாகத் தோற்றம் கொண்டுள்ள போதும், மிகுந்த மென்மையான பெண்மனத்தைச் சித்திரித்து எழுதுவதில் வல்லுநர் என்பதை இத்தொகுப்பிலுள்ள பதினைந்து சிறுகதைகளும் பறைசாற்றுகின்றன.
தமிழ்ச் சிறுகதைகளில் சமுதாயவியல் நோக்குக் கொண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் டாக்டர் தா.வே. வீராசாமி ஐயா மேற்பார்வையில் 1980-1986 காலக்கட்டத்தில் டாக்டர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் ஆசியருளுடனும் டாக்டர் க.த. திருநாவுக்கரசு அவர்களின் அன்புடனும் ஆய்வு மேற்கொண்டு 24-4-1986 அன்று ஆய்வேட்டைச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்த எனக்கு முனைவர் குழு எனச்சொல்லப்படும் doctoral committee -யில் வாய்த்தவர்கள் ஆணிமுத்துகள். ஒருவர் முனைவர் இரா. இளவரசு. இரண்டாமவர் முனைவர் அ.நா. பெருமாள். முதல் ஆய்வுக்குழுக் கூட்டத்திலேயே தனித்தமிழ் இயக்கத்தில் மிக நெருங்கிய நண்பராக விளங்கிய பொழுதும், டாக்டர் ச.செந்தில்நாதன்+ கலாநிதி சிவத்தம்பி தொடங்கி, தமிழ் ஆங்கிலச் சிறுகதை இலக்கண நூல்கள் நாற்பத்தாறனைக் கரைத்துக் குடித்துவிடவேண்டும் என்று நீளமானதொரு பட்டியல் தந்து ‘அன்’பாகக் கட்டளையிட்டார் முனைவர் இரா. இளவரசு. அப்படிப் “பெற்ற” சிறுகதை இலக்கண அறிவை என் சித்தத்துள் ‘அடக்க்க்க்க்க்க்க்க்கி’ வைத்துக் கொண்டு இதை எழுதுகிறேன்.
இத்தொகுப்பில் யாழ்சூழ் தமிழான ஈழத்தமிழ் என் நொய்யல் போல் நண்பர் பேனா மனோகரனின் வையைபோல் வெகு இயல்பாகக் கரைபுரண்டோடுகிறது. உடனமர்ந்து திறனாய்வு செய்த ‘சித்தாந்த ரத்னா’ திகைத்துப் போனார். அத்தகைய சொற்களை நானே புதுச்சேரித் தமிழில் விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது. என் பூர்விகமான கடாரத்துடன் தொடர்பு கொண்டதுதானே ஈழமும்?
இந்தச் சட்டத்தரணி எதில் பெரிதாக வெற்றி பெறுகிறார் தெரியுமா? ‘வட்டாரத் தமிழ்’தானே என்று “சுருக்கமாக இருவரிகளில்” குழப்படி செய்யும் வறண்டமன வயிற்றெரிவுமிகு அறிவு சீவிகளை வெட்கமுறச் செய்யும் வண்ணம் தன் ஈழத்தமிழை உலகத் தமிழாக்குகிறாரே.. அதில்தான்.
உயிர்த் துடிப்புள்ள வாசகர் எவராயினும் இப்பூவுலகின் எந்த மூலையில் வாழும் ‘தமிழ் வாசிப்பு’க் கொண்டவர் எவராயினும், குறிப்பாகப் பெண் வாசகர்களும் பெண்மனம் புரிதலைக் கொண்ட ஆண் வாசகர்களும் ராஜாஜி ராஜகோபாலன் அவர்களின் கதைகளை ஒருமுறைக்கிருமுறை வாசித்துப் பாராட்டவே செய்வார்கள்.
காதல் சம்பந்தமான கதைகளும் பெண்களின் உணர்வுகள் தொடர்பான கதைகளும் மட்டுமே பெண்களை மிகவும் கவருகின்றன என்பதை இந்த மதிப்புரையை நான் எழுத ஒத்துழைத்த நண்பியர் எண்பித்தனர். இது எனக்கு வியப்பை மட்டுமின்று, தமிழ்த் திரைப்படக் கதைப்போக்குக் குறித்த விழிப்பையும் ஏற்படுத்தியது. ‘பாசமலர்’ படக் காலக்கட்டத்தில், அரங்கை விட்டு வெளிவரும் பெண்களின் முந்தானை நனைந்து பிழியப்பட்டிருப்பதையும் மழைவிட்ட தூவானம் போல் அவர்களின் விழிகள் வெளிறியிருப்பதையும் கோவை இராயல் தியேட்டருக்கு முன்பு எங்கள் பள்ளி இருந்ததால் கண்டிருக்கிறேன். இப்பொழுது நயன்தாரா, த்ரிஷா போன்றவர்கள் அந்தப் போக்கை மாற்றிவிட்டனர். இப்பொழுதெல்லாம் ஆண்கள் ‘சப்ஜெக்ட்’ படங்கள் அதிகமாதலால் சூது, வாது, பொய், கபடம், மதம், மாச்சரியம் முதலான அறுவகைக் குணங்கள் தமிழ்த் திரையுலகை ஆள்கின்றன. இப்பொழுது நாம் ராஜாஜி ராஜகோபாலனின் மறுபக்கக் கதைகளுக்கு வருவோம்.
ஆயுள்வேத “டாக்டர் மயில்வாகனம் புரண்டு படுத்தார்” என்று ‘பத்தியம்’ கதை விழிக்கிறது. “மயில்வாகனம் காதிலிருந்த குறைச் சுருட்டை எடுத்து வாயில் வைத்துக் கொண்டார்” என்று தூங்கப் போகிறது. இடையில் பத்தியம் பத்தியமாகவே ஜெயிக்கிறது.
ஆயுள்வேதத்தையே சத்துவ-பத்திய வாழ்க்கையாகக் கொண்டொழுகும் அவர், தன் தொழில் தர்மமே குறியென்று வாழ்கிறார். ‘Non compromising medication’ என்று மருத்துவ உலகில் அழைக்கப்படும் ‘திட்டவட்டமான பண்டுவமுறை’யையே தன் இயல்பாகக் கொள்கிறார். செல்வாக்கு மிக்கவர்தான். ஆனால், செல்வம் சேர்க்காதவர். ஏழ்மையே தாழ்வில்லை; எந்தக் காரணத்தை முன்னிட்டும் விலைபோய் விடக்கூடாது என்பதில் ‘வஜ்ரம்’ அவர். ஈழத்தமிழ் கொஞ்சி விளயாடும் இந்தக் கதையைப் படித்துப் பார்ப்பவர்கள் ‘பாக்கியவான்கள்.’ பானைக்கொரு சோறு:
“சேர்டிபிக்கட்டை நம்பி வந்தால் போதுமோ? வைத்தியத்தை நம்பியெல்லோ வரவேணும்.”
“காசு எவ்வளவெண்டாலும்...”
“அது எனக்குத் தேவையில்லை. நான் வைத்தியத்துக்கு மாத்திரம் காசு வாங்குவன். போட்டுவாருங்கோ.”
இப்படிப் பேசுபவர் “வீட்டில் இருந்ததெல்லாம் உழுத்துப்போன உரல் உலக்கைகளும் மருந்துச் சீசாவுகளும்தான்.”(ப. 49)
‘விழிப்புகள்’ -- இந்தக் கதை நனவோடை முறையிலும் கனவுகாண் நிலைமையிலும் [stream of consciousness + dreaming brainy state] சொல்லப்பட்டிருப்பதைச் சொல்லிக்காட்ட வேண்டியது முக்கியம். சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நின்ற மரத்தின் கதை. இது விழுந்த மரத்துக்கும் மனிதனுக்கும் நிகழும் ‘நிகழ்மை’ [synchronicity என்பது உளத்தியல் தத்துவத்தில் வருவது; synchronization என்பது திரைப்பட அறிவியலில் வருவது] அவன் புலன்கள் ஒடுங்கவில்லை. ஆனால் சிந்தனை ஒடுங்குகிறது. மனமோ, மோனப் பெருவெளியில் மிதக்கும் பரவசம் எய்துகிறது. பானுமதி என்னும் செவிலி/ உயிர்த்தோழி/ காதலியின் ‘அந்த’ முறுவல் அவனின் ஆன்ம விடுதலைக்கு இட்டுச் செல்கிறது.
‘கறுத்தக்கொழும்பான்’ - அகோ.. வாரும் பிள்ளாய்... இந்தக் கதைதானே ராஜாஜியையும் தேவமைந்தனையும் நட்பால் பிணைத்தது... சரசுவதி என்ற யதார்த்தமான ‘கேரக்டர்’... உலகெங்கும் சாதி மத மொழி நாடு பேதமற்றுப் பார்க்கக் கூடிய பெண்பாத்திரம்... ”வேலிக்கு இந்தப் பக்கத்திலிருந்து ஒப்பாரி வைத்த சரசுவதியின் தொண்டை எந்த அளவுக்குத் திறந்திருக்கிறது என்பதை வைத்துக்கொண்டு எந்த அளவு தூரத்திலுள்ள ஆளுக்கு முறைப்பாடு செய்கிறாள் அல்லது அள்ளி வைக்கிறாள் என்பதை அந்த ஊரில் எவரும் அறிந்து கொள்வர்” (ப. 71) என்று அவள் அறிமுகம் தொடங்குகிறது. எங்களூரில் ஒருவர்.. பக்கத்து ஊரில் உள்ளவர்க்குப் போன் போட்டால் அதற்கேற்ப மென்மையாகவும்; தூரத்திலுள்ள ஊருக்கோ நாட்டுக்கோ போன் அடித்தால் அந்த ஊர்/நாடு எந்த அளவு தொலைவிலுள்ளதோ அந்த அளவுக்குத் தன் ‘வால்யூமை’ ஏற்றிக் கொள்வார். அப்படியிருக்கிறது, சரசுவதி, தன் ஊருக்குள்ளேயே முறைப்பாடு வைக்கிற ‘லெச்சணம்.’ சாவித்தல் அல்லது அறம் பாடுதல் அவளுக்குக் கைவந்த கலை. தருமனைத் தறுமன் என்று பல்லைக் கடித்துக் கொண்டு வைபவள்.
தலைமையாசிரியரைப் பிடிக்காத நண்பர் ஒருவர் “என்ன ஹெட்மாஸ்டன் அவன்?” என்று கேட்பார் இங்கே. சரசுவதியின் மொழிப் புழங்கல், ரகர, றகர, ழகர, ளகர, லகர வேற்றுமைகளைத் தன் வயிற்றெரிச்சலுக்கேற்ப, மாற்றிக் [tune] கொள்ளும். அப்பேர்ப்பட்டவள், எந்தத் தருமனத் ‘தறுமன்’ என்று வைவாளோ, அதே தருமன் வைரவசாமிக்குப் பொங்கலிட விறகு வாங்கி, சுட்டெரிக்கும் வெயிலில் அவள் சுமந்து வரும்போது பார்க்க நேர்ந்து சுமையைத் தன் தோளுக்கு மாற்றிக் கொள்ளும் பொழுதே அவள் வக்கிரம் நாண்டுகொள்ள; பரிவும் பாசமும் அவள் சித்தத்துள் நுழைந்து கோலோச்சத் தொடங்கி விடுகின்றன. மாற்றார் செய்கையால் நம் மனம் ஏற்கும் வேதியல் [ரசவாத] மாற்றமே இந்தக் கதையின் கொடுமுடி. இந்தியத் தமிழ்நாட்டுத் தமிழ் வாசகர்களே! ‘கொழும்பான்’ என்பது, என்ன மரமென்று சொல்லுங்கள் பார்ப்போம் wink emoticon
‘தெற்காலை போற ஒழுங்கை’ கதையப் படிக்கும் முதியோர் இல்லை மாமியார்கள் அழுதே விடுவார்கள். தமக்கிப்படியொரு மருமகளைத் தரவில்லையே ஆண்டவரே என்று கடவுளை நொந்து கொள்வார்கள். ஒனக்கெழுதி வச்சது அப்படித்தான் என்று அடுத்த கட்டில் கெழம் சிடுக்கெடுக்கும். அப்படிப்பட்டவள் இக்கதையில் வரும் பொறுப்பான மருமகள். மகன் தங்கள் குடும்பப் பொறுப்பை ஏற்பான் என்று பெற்றோர் நம்ப, ‘தயக்கம் தங்கரெத்தின’மான மகன் தயங்ங்ங்ங்க, புதிதாக வரும் மருமகளோ, “நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்று அவன் தங்கைகளைக் கரையேற்றும் பொறுப்பைத் தானே ஏற்பதும்... கற்பனை போலிருந்தாலும் அருமை. நாம் பார்க்காமல் விடுவதால் அத்தி பூக்காமல் காய்க்கிறதா என்ன? ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கும் ‘ரெகுலர் சமாச்சாரங்களை’ விவரித்தாலும் இந்தக் கதை தெற்காலை போற ஒழுங்கான ஒழுங்கையாக, கோர்வையாக, அழகாக, நுட்பமாக நவிலப்பட்டிருப்பது ராஜாஜியைச் சிறந்த ‘கதைசொல்லி’ ஆக்குகிறது.
‘மெளனத்தின் சப்தங்கள்’ - ‘Euthanasia’ என்று அழைக்கப்படும் ‘கருணைக்கொலை’ என்று பிழையாகச் சொல்லப்படும் அறச்செயல் குறித்து மீயுயர் மாந்தநேயத்துடன் ஆராயும் அரிய கதையாடல். இதற்காகவே ராஜாஜியின் கோட்டில் ‘எம்.வி.பி.’ பதக்கத்தை அணிவிக்கிறேன். Sue Miller எழுதிய ‘While I Was Gone’(1999) என்ற அருமையான புதினத்தில், ‘அறவழி உயிர்நீக்கல்’ என்னும் euthanasia வை ஜோயி என்றழைக்கப்பெறும் டாக்டர் பெக்கர் [Dr. Becker] என்ற கால்நடை மருத்துவர், ஆயிரக்கணக்கை எட்டும் அளவு செல்ல விலங்குகளான நாய்களுக்குச் செய்திருப்பாள்/ர். மனிதக் கொலை செய்தவனான எலெ மஃயூ என்னும் பழைய நண்பன், தன் செல்ல நாய்க்கு அந்தச் செயல் அவளால் செய்யப்படக் கூடாது என்பதிலேயே குறியாய் இருப்பான். அந்தப் புதினத்தைத் தற்கால ஆங்கிலம் அறிந்தவர்கள் வாசியுங்கள். தவற விடாதீர்கள். இங்கே வரும் மனிதர், ‘தானுண்டு தான் வேலையுண்டு’ என்று இருப்பவர். மூலிகை வைத்தியர். சிவனடியான் - சரியான பெயர். சிவனே வைத்திருப்பார் போல. தன் மகனாக இருந்தாலும் தீராத நோயினால் வலியால் துடிக்கும் நிலையில், வைரவசாமியை வேண்டிக்கொண்டு ‘அந்த நாள்’ மாலை முழுவதும் தன் மகன் ஐயங்கனுக்காக இறுதி ஒரே ஒரு மருத்துவமாக மூலிகைகளை அரைத்து, ஐயங்கன் ஆசையாக வளர்த்த ஆட்டின் பாலிலேயே அக்கலவையைக் கரைத்து ஊட்டுவார். “நடப்பது என்னவென்று முன்னமே அறிந்துகொண்டவன் போன்று ஐயங்கன் தன் தகப்பனை நன்றியுடன் பார்த்தான். அவன் கண்கள் ஒரேயடியாக இடுக்குகளில் சொருகிக் கொண்டபோதுதான் தன் மகனின் வேதனைகளுக்கு இறுதியில் முடிவு வந்துவிட்டதெனச் சிவனடியான் அறிந்து கொண்டார். அப்போது அவரெழுப்பிய ஓலம்தான் அந்த ஊரையே உலுக்கியெடுத்தது” என்று படித்துவிட்டு என் நண்பி அழுத அழுகைதான் இந்த மதிப்புரையையே நான் அவர்களுடன் சேர்ந்து எழுதக் காரணமாயிற்று, “என்ரை மோனை..!” என்று இந்த மெளனத்தின் சப்தங்களுக்கு அந்தமும் ஆதியுமாக ஆன சிவனடியானின் ஓங்கார அலறல் உலுக்கியெடுத்துவிடும் இக்கதையை உண்மையாக வாசிப்பவர்களை. முடிவில், “மகன் செத்ததோடை சிவனடியானுக்கு விசர் வந்திட்டுது” (ப. 115) என்று, நடந்ததை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் ஓரிருவர், ஊரெழுமுன்னே உறக்கத்திலிருந்து விழித்து கொண்டவர்கள், தமக்குள் சொல்லிக் கொள்வதாகக் கதை முடிகிறது. “தொகுப்பினுள்ளே உருக்கமான மணியான கதை” என்று என் சகவாசகியரிடம் பதக்கம் பெற்ற கதை.
‘ஆசை வெட்கம் அறியும்’ என்ற ‘கடோசி’ [கரிசல் சொல்]க் கதை ஆண் மனத்தின் அபத்தமொன்றை மென்மையாக நவிலுகிறது. தன்னிலும் முப்பது வயது குறைந்தவளைச் சின்ன வீடாக ‘செட்-அப்’ செய்து சாதிக்க, சிவப்பிரகாசத்தார் தமக்கு நண்பரான ‘லாயர்’ ஒருவரைப் பயன்படுத்துகிறார். ஆனால், அந்த வழக்குரைஞரோ மனச்சாட்சியும் விவேகமும் உள்ளவர். ‘ஃபீஸ்’ஐப் பெரிதாக எண்ணாதவர். அன்னபூரணி அக்காவைத்தான் உயர்வாகக் கருதுபவர். மனவியலடிப்படையிலும் உலகியலடிப்படையிலும் குழந்தையொன்றுக்கு எடுத்துச்சொல்வதுபோல் பக்குவமாக சிவப்பிரகாசரிடம் எடுத்துச்சொல்லி, உண்மையுரைப்போனாகவும் விளங்கி, அவரைவிட்டுப் பிரிந்துபோன இல்லாளை சிவப்பிரகாசர் இல்லத்தில் இருப்பவள் ஆக்குகிறார். இந்த ‘லாயர்’ இன்னொரு கதையில் வரும் ‘ஆயுள்வேத மருத்துவர்’ இருவரும் ‘குறிக்கோள் கதைமாந்தர் ’[Ideal characters] என்ற ‘கதைமாந்தர் வகை’யில் அடக்கப்பெறுவர். யாழ்ப்பாணத்துப் பெண்கள் தங்கள் கணவர்கள் குறித்துப் பேசும் வார்த்தைகள் (ப. 213) எனக்கு, இந்தியத் தமிழ்நாட்டின் முக்குலத்தோர் பேச்சு வழக்கை மிகவும் நினைவுபடுத்தியது. மிகவும் சுவாரசியமானது.. இக்கதையில் வரும் யாழ்ப்பாணத்துப் பெண்களின் பேச்சு வழக்குத்தான்.
‘கடவுளும் கோபாலப் பிள்ளையும்’ என்ற பதின்மூன்றாவது கதை, புதுமைப்பித்தனை, தன் தலைப்பால் நினைவூட்டுகிறது. ஆனால், இதில் கடவுள் வருவதில்லை. அவருடைய முகவர்/பிரதிநிதி/தூதுவர்/தொண்டன்... வருகிறார். அவரிடம் நிறையக் கேள்விகள் கேட்கிறார் கோபாலப் பிள்ளை. நமக்கும், எல்லோருக்கும் இப்படிப்பட்ட கடவுளின் தூதுவரிடம் கேள்விகள் பற்பல கேட்கவேண்டும் என்ற ஆர்வம் வரும்தான். இந்தக் கதையில், மற்ற கதைகளைப் போலல்லாமல், கடவுளின் தூதரிடமிருந்து எந்த மறுமொழியும் கிடைக்கவில்லை. “இந்த யுகத்து இன்னல்களைத் தீர்க்கப் படைத்தவனாகிய தனக்கே வழி தெரியவில்லை என்று சொல்லி நழுவுபவர்தான் இன்றைக் காலக் கடவுள் என்று சொல்கிறீர்களோ?” (ப. 189) என்று கடோசியாகக் கேட்கும்போது, வேறு வழியில்லாமல் மாயமாய் மறைந்து போகிறார். வரமாவது வாங்கியிருக்கலாமே என்று கோபாலப் பிள்ளையின் மனைவி அங்கலாய்க்கும்பொழுது, “வரம் கொடுக்கும் வல்லமை கடவுளிடம் எப்போதோ வற்றிப்போய் விட்டது. அதை மறைக்கவே தலையைக் காட்டிவிட்டுப் பெயரைக் காப்பாற்றிக்கொள்ளும் தந்திரத்தைக் கையாள்கிறார். மனிதர்கள் இனியும் அவரை அழைப்பதை மறந்துவிட்டு தமக்குள் கடவுளைத் தேடிக்கொள்ள வேண்டியதுதான் இன்றுள்ள இன்னல்கள் தீர ஒரேவழி” (ப. 190) என்று கோபாலப்பிள்ளை சொன்னாலும் “அவர்” மறைந்தபின் அவர் விட்டுப்போன வாசனை மட்டுமே வீட்டினுள் எஞ்சியிருந்தது. என் மனதில் மட்டும் ஏதோ ஒருவகையான சூனியம் படர்ந்ததுபோன்ற உணர்வு மேலிட்டது.... என் மனம் ஏனோ கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருந்தது” (ப. 190) என்ற கோபாலப்பிள்ளையின் ‘நன்றி நவில்தலில் [Thanksgiving] கதை முடிகிறது.
© மதிப்புரைக் காப்புரிமை: தேவமைந்தன் (Puducherry A. Pasupathy) 10/03/2016

Mar 5, 2016

மனம் கவர்ந்த ராஜகுமாரன்

Siva Jeya
January 9, 2016

கனவுகளைக் கண்களில் நிறைத்து நனவுகளாகும் காலங்களை எதிர்நோக்கி நாடு கடந்து வந்தவர்கள் நாங்கள். ஆனாலும் எங்கள் கனவுகளில் இன்னமும் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள்.

எத்தனையோ வருடங்களாக எங்களையும் எங்கள் அடையாளங்களையும் இழந்துகொண்டிருக்கும் நிலையினைத் தடுக்கும் தடைக் கல்லாக எங்கள் படைப்பாளிகள் இருக்கிறார்கள் என்பது எமக்கு எவ்வளவு ஆறுதல்.

தரம் பிரித்துச் சிறப்புபற்றி விவாதிப்பதற்கும் அப்பால் எங்கள் சந்தோஷங்களைத் தொலைத்து, வாழ்கிறோம் என்ற பெயரில் வாழ்ந்துகொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களை ஒவ்வொரு படைப்பாளியும் வாழவைக்கும் சுவாசமாகிறான். அந்தவகையில் எழுத்தாளர் ராஜாஜி ராஜகோபாலனின் குதிரைஇல்லாத ராஜகுமாரனின் சிறுகதைத் தொகுப்பினை வாசிக்கும் பலன் கிடைத்தது. நன்றிகளுடன் ஒரு வாசகியாக என்னுடைய கருத்துகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்றிருக்கிறேன்.

தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி என்பார்கள்.ஆனால் இங்கு நேரம் என்பது தான் தேடும் வரமாகிவிட்டது. நண்பர் ராஜாஜி அவர்களின் சிறுகதைகளை வாசித்து ஓரளவுக்கு எனது அறிவிற்கெட்டிய விதத்தில் உள்வாங்கி, குழம்பித்  தெளிந்து விடை தெரிந்தும் தெரியாமலும் வாசித்து முடித்திருக்கிறேன்.

பதினைந்து சிறுகதைகளைக் குதிரை இல்லாத ராஜகுமாரன் என்ற தலைப்பின் கீழ் தந்திருக்கிறார்.  ஒருபார்வையாளனாக சம்பவத்திற்கு வெளியே நின்று சிலகதைகளும் கதையின் நாயகனாக சில கதைகளும் எங்கள் பார்வைக்கு தந்திருக்கிறார்.
நான் உணர்ந்தளவில் ஒவ்வொரு கதைகளிலும் வரும் பெண்களின் இயல்புகளை அவர்களின் வாழ்வுடன் பிணைந்த விதமாக காட்டியிருக்கின்றார். இன்னும் சொல்லப்போனால் பிறந்த காலத்திலிருந்து வளர்ந்து பருவமெய்தி வாழ்க்கைக்கு தயாராகும் ஆணோ பெண்ணோ தங்கள் துணை எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனையில் வாழ்கிறார்கள். அப்படி ஒரு கற்பனையில் வாழும் போது ஆண்களின் தவறுகளையும் குணங்களைகளையும் அவர்களின் இயல்புகள் என்று இயற்கையுடன் இணைத்து விடுகிறார்கள். ஆனால் அதே நேரம் பெண்கள் பூரணமானவர்கள் அவர்களிடம் மாறான இயல்புகள் இருக்க முடியாது. இருந்தால் அவள் ஒரு கௌரவம் மிக்க பெண்ணாக மதிக்கப்பட மாட்டாள். இயற்கை தந்திருக்கும் இயல்புகளைத் தனது ஒவ்வொரு கதையிலும் வரும் பெண் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்  ராஜாஜி. இன்றுவரை, இப்படி இருந்தால்தான் பெண் என்ற வரைவிலக்கணத்தை ஏற்படுத்தியவர்களும் அதைப் பின் தொடர்பவர்களும் இந்த எழுத்தாளர் உருவகித்திருக்கும் கதாநாயகிகளை வெறுக்க கூடும். ஆனால் பெண்களின் உணர்வுகளைக் குறைபாடாகவோ கேவலமாகவோ எண்ணாமல் அவர்களின் இயற்கை என்று புரிந்து கொள்ள வேண்டும் என்பது காலத்தின் தேவை மட்டுமல்ல மனிதாபிமானமும் கூட என்பதை வர் கதைகளின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒரு படைப்பின் ஆளுமை அது வாசகனின் மனதில் ஏற்படுத்தும் மாற்றத்தையோ அல்லது சிந்திக்க வைப்பதிலேயோ அல்லது கவரப்படுவதிலேயோதான் தங்கியிருக்கின்றது என்பது என் எண்ணம்.

அவ்வகையில் இவரின் சிலகதைகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன.

கறுத்தக்கொழும்பான் என்ற சிறுகதை எங்கள் பேச்சுத் தமிழில் நகைச்சுவையுடன் சிறியதொரு காதல்சுவையுடன் அயலவர் உறவினை விபரிப்பதன்மூலம் ஆரம்பிக்கிறது. கதையின் நாயகி சரசுவதியைக் கதையின் நடையில் கண்முன்னே காணமுடிகின்றது.
இளம் பருவத்தினனான தருமனின் குறும்புகளைச் சகிக்க முடியாமல் அன்றைய காலையைப்  புலம்பலுடன் ஆரம்பித்த சரசுவதி மாலையில் அதே தருமனுக்காக பழம் பழுக்கவைத்து கொடுக்கும் மனநிலைக்கு வரும் ஒருநாள் சம்பவத்தைக் கறுத்தக்கொழும்பான் போலச் சுவையாகச் சொல்லியிருக்கிறார் ராஜாஜி.

அவள் விறகுக்கட்டைக் குனிந்து எடுக்கும்போது வேறு அலுவல் இருந்ததால் விறகு கடைக்காரக் கிட்டினன் அவள் இடுப்பினைப் பார்க்காதது அவளுக்கு மனத்தாங்கலை ஏற்படுத்த விறகுக்கட்டு இன்னும் பாரம் கூடி விட்டதாக சரசுவதி உணர்ந்ததை நயமாகச் சொல்கிறார்.

விழிப்புகள் என்ற கதையினை வாசிக்கத் தொடக்கி முடிக்கும் வரை விழித்திருக்க வைத்துவிடுகிறார் ராஜாஜி. அழகியலும் தத்துவமும் இரண்டறக் கலந்த கருவினைக் கொண்ட இக்கதை நகரும் விதம் முடிவு என்னவென அறியத் தூண்டிய கதை. மனவேதனையைத் தரக்கூடிய அல்லது எங்களை சிந்திக்க வைக்கக்கூடிய கதையாக இருந்தாலும் காட்சிப்படுத்துதலில் வர்ணனையைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.
ஒரு பெண்ணில் அந்த அழகின் பிறப்பிடந்தான் எது என்று தீர்மானிக்க முடியாத படி அது அவள் மீது ஏங்கும் நிறைந்திருக்க வேண்டும் என்று அழகாகவும் ஆழமாகவும் கூறியிருக்கிறார்.

செம்பருத்தி என்ற கதையில் மரணவீட்டு நிகழ்வினைத் தன்னுடைய வர்ணனைகளின் மூலம் கண் முன் கொண்டுவந்து என்னுடைய மன உளைச்சளுக்கும் சிந்தனைக்கும் காரணமாகி விடுகின்றார்.

மாங்கல்யம் என்ற ஒன்று எங்கள் சமூகத்தில் எப்படிப்பட்ட முக்கியத்துவத்தை வகிக்கிறது என்பதையும் ஒரு பெண்ணின் வேதனையினையும் காட்சியாக்கி தன்னுடைய மனைவியின் உணர்வுகளை மதிக்கும் ஒரு கதாநாயகனை நம்முன்னே அடையாளம் காட்டுகிறார்.

இதைப்போன்று, மனதை வேதனைப்படுத்தும் மௌனத்தின் சப்தங்கள். மகனுக்கு வந்திருக்கும் நோய் காரணமாக அவன் அனுபவிக்கும் வேதனைக்கு மருந்து எதையும் கண்டுகொள்ள வழிதெரியாத ஒரு கையாலாகாத்தனம் மிக்க தந்தையின் உணர்வுகளை வடித்த கதை. அந்த உணர்வுகளே இக்கதையை இன்னொருமுறை வாசிக்க இயலாது என்று சொல்லுமளவிற்கு மனதைக் கட்டிப்போட்டுவிடுகின்றன.

மேலும் சில கேள்விகள் என்ற கதையில் மனித உரிமையான காதலைக் கேவலமான ஒரு செயலாகக் கருதி ஊமையாகிவிட்ட ஒரு பெண்ணும் ஆணும் சந்திக்கும் சவால்களையும் அனுபவிக்கும் வேதனைகளையும் அவர்கள் மீண்டுமொருமுறை சந்திக்கும்போது ஏற்படும் சங்கடங்களையும் மறுமணம் பற்றிய விழிப்புணர்வினையும் கூறியிருக்கின்றார். 

சொல்லவந்த விஷயம் காலமாற்றத்துடன் அவசியமானது என்றாலும் கூட கதையின் நாயகிக்கும் நாயகனுக்கும் இடையில்உள்ள கருத்து வேறுபாடுகளைத் தளர்த்திய கதை நகர்வில் விறுவிறுப்பு மற்றைய கதைகளில்இருந்தளவு வலுவாக இருக்கவில்லை என்பது நான் உணர்ந்தது.

ஆதலினால் காமம் செய்வீர் என்ற கதையினை யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழக மாண்வனொருவனின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக வைத்து இளம் சமுதாயத்தினரின் கண்மூடித்தனமான கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையினையும் சமூகமும் உறவுகளும் ஒரு இளம் சந்ததியினரின் வாழ்வை எவ்வளவு தூரம் பாதிக்கின்றது என்பதையும் வாசகர் மனதில் ஆழமாய்ப் பதித்திருக்கிறார்.

கழுவுகிற மீனில் நழுவும் மீனாகத் தன்னுடைய ஆணித்தரமான கருத்தினை வாசகர்களுக்கு கூறாமல் முடிவு உங்கள் கையில் என்பது போல் முடித்திருக்கின்றார்.
இந்தவிடயத்தில் எனக்கு சிறிது முரண்பாடு உண்டு.

முன்னேற வேண்டிய சமுதாயம் வழி மாறும்போது நண்பனாக மட்டுமல்ல ஆசானாகவும் ஆணித்தரமான முடிவுகளை விளக்கத்துடன் கூறி அவர்களைச் சரியான பாதையில் பயணிக்க வைக்க வேண்டிய தலையாய கடமை எழுத்தாளர்களுக்கு உண்டு என்பது என் எண்ணம் .

ஒரு உண்மையினை நான் க்கதையில் ஒப்புக்கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு பெற்றோரும் இந்த கதையை வாசித்த பிறகு மது பிள்ளைகளின் தனிப்பட்ட தேவைகளை ஓரளவாவது உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

ஆசை வெட்கம் அறியும் என்ற கதையும் பௌருஷம் என்ற கதையும் ஏறத்தாழ ஒரே வாழ்வு நிலையிலுள்ள இரு பெண்களைப்பற்றிப் பேசுகின்ற. ஒரு பெண் வேறுவழியின்றித் தன்னை  இந்த இரக்கமற்ற சமூகத்திடம் ஒப்படைக்கிறாள். கற்பு என்பது உடலில் அல்ல மனதில் என்று உணர வைத்துவிடுகிறாள் இன்னொருத்தி. பௌருஷத்தை கதையை வாசித்ததும் மனதில் நெகிழ்வு ஏற்பட்டது என்றால் மிகையில்லை.

துடுப்பின்றி, அடிக்கிற அலையின் திசையில் அடித்துச் செல்லப்படும் படகாய் எமது வாழ்க்கையில் பழமையைச் சீர்படுத்தவும் புதுமையை முயற்சித்துப் பார்க்கவும் எண்ணமிருப்பினும் தோதாக அமையாத சூழ்நிலைமிக்க எங்கள் சமூகத்தில் ராஜாஜி எழுதிய சிலகதைகள் சற்று நில்லுங்கள் என்று எங்களைத்தட்டிக்கூப்பிடுவதைப்போன்றுஅமைந்துள்ளன.

ஒரு மனிதனின் சுயமரியாதையும் அவனது கல்வியும் அறிவும் விலை மதிப்பில்லாதவை என்பதைப் பத்தியம் என்ற கதையின் மூலம் வெளிப்படுத்துகிறார்.
ழ்மையென்ற அரக்கனுக்கு அடிமையாகாமல் தன்னுடைய தொழிலின் நேர்மையினைக் கதையின்மூலம் உணர்த்தியிருக்கும் பரியாரியாரின் மனத் திண்மையை நமக்குப் பத்தியம்சமைத்துத் தருவதுபோல் பேச்சுவழக்கில் சொன்ன முறை பாராட்டிற்குரிய விஷயம்.

துபோன்றே கடவுளும் கோபாலபிள்ளையும் என்ற கதையில் கடவுளையும் தன்னையும் மோதவிட்டு நகைச்சுவையும் நக்கலுமாய் வேடிக்கை பார்க்கிறார். இன்றைய உலகில் பெண்ணின் உரிமைகள் பறிக்கப்படுவதற்குக் கடவுளே காரணமென்று சாடிச் சிந்திக்கவைத்திருக்கின்றார்.

சுபத்திராவுக்கு என்ன நடந்துவிட்டது என்ற கதையில் ஒரு பெண் எப்படியெல்லாம் ன் அழகினை ரசிக்கிறாள் என்பதையும் அதை எவ்விதம் ஆயுதமாக்குகிறாள் என்றும் வெகு அழகாகக் கூறியிருக்கின்றார். உண்மையில் இதில் எனக்குச் சிறி சந்தேகமும் உண்டு. இதை ராஜாஜிதான் எழுதினாரா? ஒரு பெண்ணின் உணர்வுகளை ஒரு ஆண் பெண்ணின் பார்வையில் எழுதுவது என்பது இலகுவானதல்ல. ஆனால் அந்த உணர்வுகளை இக்கதையிலும் குதிரை இல்லாத ராஜகுமாரன் கதையிலும் மிக நுட்பமாக அணுகி வாசகர் மனதைத் தொட்டிருக்கிறார்.

குதிரை இல்லாதராஜகுமாரன் கதையில் அதன் நாயகி விஜயா போன்று கண்ணுக்குத் தெரியாத முள் வேலிகளை எல்லைகளாக்கி வாழ்வினை தொலைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் மனநிலையினையும் அவர்களை அவ்வாறு வாழ வற்புறுத்தும் எங்கள் வரட்டுச் சம்பிரதாயங்களையும் எங்கோ தப்பித்தவறி மனிதத்துடன் வாழும் ஆண்களையும் எம்மோடு பேசவைக்கிறார். இக்கதையை வாசித்ததும் இது காலப்போக்கில் மாறிக்கொண்டிருக்கும் சூழலாக இருந்தாலும் ஆங்காங்கே தங்கள் மணவாழ்வை ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முதுகன்னியர்கள் வடிக்கும் கண்ணீர் என் கண்ணையும் நனைத்தது. கதையின் முடிவில் ஏற்பட்ட திருப்பத்தை நான் இங்கே சொல்லப்போவதில்லை.

மொத்தத்தில், இரவு ரயிலில் தொடங்கிய பயணத்தின் இறுதியில் கொடிகாமத்தில் இறங்கித் தட்டிவானில் ஏறி வழியில் சுட்டிபுரத்து அம்மனைக் கும்பிட்டு நெல்லியடி, புளியடிச் சந்தியில் இறங்கி நடந்து வீடு பொய்ச் சேர்ந்த அனுபவத்தினை இந்தகதைகள் ஒவ்வொன்றையும் வாசித்தபோது அனுபவித்தேன்.

எத்தனையோ பேச்சு வழக்குச் சொற்களும் கதைகளெங்கும் இழையோடிப்போயிருக்கும் பெண்மையின் உணர்வுகளும் என் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு உங்கள் ஒவ்வொருவரின்  பார்வைக்காகவும் காத்திருப்பவை. அவற்றினை முழுமையாக உணரவேண்டுமானால் எமது மண்ணின் மறைந்துகொண்டிருக்கும் வழக்குத் தமிழையும் அதன் சுவையினையும் அதன் சுவையையும் உணரவேண்டுமானால் நீங்களும் இந்நூலினை ருமுறை வாசியுங்கள். நிறைவான வாசிப்பு அனுபவம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
----