மேகங்கள் அனைத்தும் மலையினில் மோதி
மெலிதாய்த் தவழ்கிறது – என்
மோகங்கள் அவளின் மார்பினில் மோதி
முகையாய் அவிழ்கிறது.
அவிழ்கிற கூந்தலில் ஒழுகிற நீரலை
இடையினை அணைக்கிறது – அவள்
இதழ்களில் துடிக்கும் இளமையின் தாபம்
இதயத்தைப் பிணைக்கிறது.
பிணைந்திடும் போழ்தில் பகிர்ந்திடும் போதை
பொங்கிச் சரிக்கிறது - அவள்
பார்வையில் தெறிக்கும் பருவத்தின் செய்தி
பாயை விரிக்கிறது.
விரிகிற முல்லை விழிகளின் வழியாய்
வீசிடும் மின்னலைகள் – வாயின்
வார்த்தைகள் இன்றிக் கண்களின் ஊடே
வழங்கிடும் சொல்லலைகள்.
சொல்லிய தெதுவும் புரிவது இன்றிச்
சேர்ந்திடும் காற்றினிலே – வானில்
சிறகினை விரித்துப் பறப்பது தானே
சிறந்தது காதலிலே!
This comment has been removed by the author.
ReplyDeleteகண்களில் நுழைந்து மெல்ல
ReplyDeleteகருத்தினில் கலந்து நாளும்
கனவிலும் புகுந்து சிந்தையைக்
கவர்ந்திடும் ஓவியமே-இவன்
காதலில் கசிந்த காவியமே!