Jul 10, 2014

ஒரு உலகம் இரு துருவம்

வாடைக் காற்றின் மெல்லிய வீச்சால் தெருவோரத்து வேலியின் மேலாய் தென்னங்கீற்றுகள் அசைந்தாடுகின்றன. அண்மையிலொரு வேப்பங்கிளையில் ஆங்காங்கே விளையாடும் சிட்டுக்களின் குரலிசையில் மனம் லயிக்கின்றது. மாலை வேளையின் பொன் வெய்யில் கண்ணுக்கு இதமூட்டுகின்றது. நான் நடந்துகொண்டிருக்கிறேன்.

அதோ தூரத்தில் விண்ணை முட்டியபடி நிமிர்ந்து நிற்கும் நல்லூர் முருகன் ஆலயக் கோபுரம் தெரிகிறது. அதன் உச்சியில் அருள் சுரக்கும் “ஓம்” என்ற எழுதுக்கள் எவ்வளவு துல்லியமாய்த் தெரிகின்றன. நீண்ட சாலையின் ஓரம் வரிசையாய் அமைந்த வீடுகளில் மாலை வேளையின் ஒருவகைத் தனிமை குடிகொண்டிருக்கிறது. அதற்கும் நான் இன்றுவரை அனுபவிக்கும் தனிமைக்கும் ஏதாவது உறவு இருக்குமா? ஓ! அதுதான் எவ்வளவு கொடியது! நாளும் பொழுதும் அவளின் நினைவை ஊட்டி வளர்த்து இன்று இதயத்துக்குள் செழித்த மரமாய் வளர்ந்து நிற்கிறதே அது! எத்தனை காலமாய் அந்தத் தனிமையுணர்வை எனக்குள்ளே சிறைவைத்து என்னையே கொன்றுகொண்டிருக்க முடியும்? இன்று நிகழவிருக்கும் சந்திப்போடு இந்த வேதனையிலிருந்து விடிவு ஏற்படாது போய்விடுமா? நான் நடந்துகொண்டிருக்கிறேன்.

என்னுடைய திருமணம் நடந்தேறி இத்தனை நாட்கள் கடந்த போதிலும் அவளைக் காணவேண்டுமென்று செல்வது இதுதான் முதல் தடவை. அதிலிருந்து கனவுபோல் கழிந்த ஒரு கால இடைவெளிக்குள் தூரத்தில் இருந்தபடியே மௌனமாக அவளை ஓரிரு தடவை நினைக்கத் தோன்றியதேயொழிய ஒருமுறையாவது அவளை நேரில் காணவேண்டுமென்ற ஆவல் எனக்குத் தோன்றியதில்லை. ஆனால் இப்போது, வாழ்க்கையில் முன்பு விளங்கியிராத எத்தனையோ அர்த்தங்களை அனுபவத்தில் விளங்கிக்கொள்வதற்காகப் பெற்ற துணையையே இழந்து தனிமரமான பிறகு, வாழ்க்கையை அவ்வளவு மோசமாக, நினைவுகளின் சிறைவாசமாக் ஆக்கி என்னையே வருத்திக்கொண்டபோது அவளைக் காணவேண்டுமென்ற ஆவல் தோன்றியது எனக்கே ஆச்சரியந்தான்.

இதுவரை மூடிக்கிடந்த உணர்வுகள் அவள் நினைவு தோன்றியதும் மெல்லென விழித்தெழுந்ததிற்கு என்ன காரணமோ என என்னால் பகுத்துணர முடியவில்லை. “உன்னை நினைக்க நினைக்க நினைவு நீழுகிறது” என்று அவளுக்கு ஒருமுறை கடிதம் எழுதினேனே, பின்னர் அவளுடைய நினைவென்பதின்றியே கனவுபோல் கழிந்த அந்தக் கால இடைவெளிக்குள் எப்படி வாழமுடிந்தது என்பதையும் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இவையெல்லாம் இடையில் வந்து என்னை ஆட்கொண்டு, பின்னர் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் பறந்துபோன அந்த உறவு ஊட்டிய இனிய மயக்கத்தினாலே என்பதையும் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

மெல்லிய வாடையும் சிட்டுக் குருவிகளின் இசையும் அந்திப் பொழுதின் இனிய சூழலும் மனதை மயக்குகையில் அந்த மயக்கத்தின் சிகரமாக அவளின் அழகிய நினைவுகள் மேலும் என் மனதில் கிளர்ந்தெழுகின்றன. அவை என்றும் மறக்கமுடியாத பசிய நினைவுகள். அவள் –

மங்கை!

நினைக்கின்றபோது நயம்மிக்க கவிதைபோலவும் பழகுகின்றபோது குழந்தையின் களங்கமற்ற உள்ளம்போலவும் எவ்வளவு கண்மூடித்தனமாக அவளின் அன்புப் பிணைப்பில் நான் கட்டுண்டு கிடந்தேன். அப்போதெல்லாம் என்னை அருகில் இருத்தி எத்தனைமுறை அன்பொழுக அழைத்து எண்ணற்ற இரவுகளில் எவ்வளவு இனிய கதைகளையெல்லாம் பேசியிருக்கிறாள். எதிர்காலத்தில் நாம் நுகரவிருந்த நளினமான மயக்கத்தை எத்துணை அழகாகக் கண்முன் ஓவியமாக விபரிப்பாள். அன்பென்ற தெய்வீக உணர்வை ஒரு தேவதைபோல் வந்து எல்லையற்று வழங்கிய மங்கையை எப்படி நான் மறக்கமுடியும்?

இவையெல்லாம் ஊரோடு வாழ்ந்து கல்லூரியில் ஒன்றாய்ப் படிக்கும் காலத்தில்தான். அப்புறம் அவள் பட்டப் படிப்புக்காக கொழும்புக்குச் சென்றுவிட்டாள். எனக்கோ அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவ்வளவு காலமாக என்னோடு போக்கிய பொழுதை விட்டு, என்னோடு அந்த நினைவுகளை மட்டும் விட்டு அவள் போய்விட்டாள். இடையில் ஓரிரு தடவைகள் ஊருக்கு வந்திருக்கிறாள். அப்போதெல்லாம் பேசச் சொற்களற்று மௌனமாகவே அந்தப் பிரிவின் தாபத்தைத் தீர்த்துக்கொள்வோம். அவ்வேளையில் விழிகளால் என்னை அவள் நோக்குகின்றபோது அதன் தண்மையில் அந்தப் பிரிவால் ஏற்பட்ட தனிமை நலிந்து அந்தப் புதிய சந்திப்பிலிருந்து மலரப்போகும் இனிய சுகந்தத்தை நான் நெஞ்சார உணர்வேன். அந்த இனிய அமைதியைக் குலைத்தவாறு திடீரென்று கலகலவெனச் சிரிப்பாள். எனக்கு மிகவும் பிடித்தமான சிரிப்பு அது. அதன் அலைகள் அவள் ஊரைவிட்டுப் பயணமாகிய ஒரு மாதம் வரைக்கும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும். ஆனால் அந்த உறவுக்குப் பின்னால் இரக்கமற்ற ஒரு இருள் நீண்டு விரிந்திருக்கிறதை நாம் அப்போது உணர்ந்தோமா? காலத்தின் கொடிய கரங்கள் இவ்வளவு பயங்கரமானவையா?

என் திருமணம் நடந்தது.

அந்தப் பிரிவுக் காலத்தில் கிழமைக்கு இரண்டு கடிதங்களாவது அவளிடமிருந்து வந்துவிடும். என் திருமணம் நடந்ததே அந்தக் கிழமையோடு எல்லாமே நின்றுவிட்டன. அவள் வழக்கம்போல் அழகாகச் சண்டித்தனம் பிடிக்கிறாளோ என்றுகூட முதலில் எண்ணினேன். ஆனால் அது பொய்த்துவிட்டது. நான் அனுப்பிய திருமண அழைப்பிதழுக்கே பதில் கிடைக்காதபோது இனி ஒரு சொல்லைக்கூட அவளிடமிருந்து எதிர்பார்க்கமுடியாதென்று நிச்சயமாக உணர்ந்துகொண்டேன்.

வாழ்வில் பற்றுக்கோட்டை வேண்டி நிற்கும் பருவத்தில் என் உயிருக்குயிரான ஒருத்தி எங்கேயோ இருக்க என் பெற்றோரின் ஆவலுக்கும் அன்பு வேண்டுகோளுக்கும் முன்னால் என் திருமணத்துக்கு உடன்பட்டு எல்லாச் சடங்குகளும் நிறைவேறி ஒன்பது மாதங்களுக்குள் யாவற்றையும் பொய்யாய்ப் பழங்கனவாய் மெல்லப் போக்கிவிட்டு இத்தனை நாளின் பின் முன்னைய துணையை நாடி இம்மாலைப் பொழுதில் நீண்ட இவ்வீதியில் நான் நடந்து கொண்டிருப்பது இதுகாலவரையும் ஆற்றமுடியாது அரற்றிக்கொண்டிருக்கும் என் இதயத்துக்கு ஆறுதல் ஊட்ட முயலும் அற்ப முயற்சியாகத்தான் இருக்கிறது. நான் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் அவளைப்பற்றிய விபரங்களை என்னால் அறியமுடிந்தது. அவைதான் அவளுடைய நினைவை என்னிடம் புதுப்பித்துவிட்டு வாழ்வின் புதிய அத்தியாயமொன்றை ஏற்படுத்துவனபோல் அமைந்தன. அந்த நெடிய கதையின் ஒரு காலத்தில் மாத்திரம் தோன்றி மறைகிற மலராக அவள் இருக்கவில்லை. என்றும் தோன்றி மறைந்து மறையாமலும் காட்சி தருகின்ற விண்மீன் போன்றிருக்கிறாள் என்பதை அந்த விபரங்கள் எனக்கு உணர்த்திவிட்டன. அந்த உணர்வு ஏற்படுத்திய விழிப்பினால்தான் எத்தனையோ மாதங்களுக்குப் பின்னர் இந்த ஆவல் எனக்கு ஏற்பட்டது. தவிர்க்கமுடியாமல் அடக்கமுடியாமல் என்னுள் கனன்று கொண்டிருக்கிற அதன் அலைகளின் உந்துதலினாலேயே அவளைக் காணப் போய்க்கொண்டிருக்கிறேன்.

அவளைப் பற்றி நான் கேள்விப்பட்ட விபரங்கள் முதலில் என்னைத் துன்புறுத்தத்தான் செய்தன. அந்தத் துன்பத்தினூடு ஒருவகைத் தாபமும் அவள்மீது எழுந்தது.  இப்போது அவளுடைய சக ஆசிரியராகக் கடமையாற்றுகிற என்னுடைய நண்பர் ஒருவரிடமிருந்துதான் அவற்றை அறியமுடிந்தது. எம்முடைய பழைய நட்பையும் உறவையும் அவர் முன்னரே அறிந்தவர். அதனாலேதான் என்னைக் கண்டபோது அவளைப் பற்றிக் கூறிவிட்டார். “பட்டப் படிப்புக்குப் பிறகு இப்போதுதான் ஆசிரியர் வேலையில் சேர்ந்திருக்கிறாள். அவள் கொழும்பிலிருந்து இங்கு வந்ததே இதற்காகத்தான். இல்லையென்றால் இங்கு வருவதை அவள் கொஞ்சமும் விரும்பவில்லைபோல் தெரிகிறது.” என்று அவர் முதலில் அவளைப் பற்றிக் கூறியபோது என்னுள் எழுந்த பரிதாப உணர்ச்சியை அடக்கமுடியவில்லை.

“வேலையில் சேர்ந்த நாள் முதல் வாழ்வில் எதையே பறிகொடுத்தவள் போல் இருக்கிறாளேயென்று பலருக்கு அவள்மீது அனுதாபமும்கூட. என்றாலும் அவளுக்கு இந்த வயதில் இப்படியெல்லாம் நேர்ந்திருக்கக்கூடாது.” என்று அவர் மேலும் கூறிவிட்டு என் மன நிலையை அளக்க முயல்வதுபோல் என்னைப் பார்த்தார். நானோ அவர் முகத்தை நிமிந்து பார்க்கவே திராணியற்று குற்றவுணர்வு நெஞ்சைக் கவ்வ விம்முகின்ற இதயத்தை அடக்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.

இதோ மங்கிய வர்ணப் பூச்சுடன் நிற்கும் மங்கையுடைய வீட்டின் முன்னால் வந்துவிட்டேன். வெளிக் ‘கேட்டைத்’ திறந்தபடி உள்ளே நுழையும் என்னைக் கண்டு நாயொன்று மெல்லக் குரைக்கிறது. மனதுக்குள் ஒரு தயக்கம் குறுகுறுத்துக்கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாது அடக்கமுடியாதவொரு ஆவல் என்னை உந்தித் தள்ளுகிறது. நான் முன்னேறுகிறேன். வீட்டின் வாசல் கதைவைத் திறந்துகொண்டு யாரோ வருவது கூரைத் தாள்வாரத்திலிருந்து தொங்கும் கொடிகளினூடே தெரிகிறது. நான் ஆவல் மேலிட வராந்தாவின் படிகளின் மேல் அடி வைக்கிறேன்.

நான் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. உள்ளிருந்து வந்தவள் மங்கையேதான். தீபம் ஏற்றப்படாத அழகிய குத்துவிளக்கைப்போல் எவ்வளவு அடக்கமாக, அமைதியின் உருவாக... திடீரென்று அவள்முன் தோன்றி ஆச்சரியப்படுத்தவேண்டுமென்று ஆவலுடன் வந்தேனே. ஆனால் என்னைக் கண்டதும் அவள் முகத்தில் எவ்வித சலனத்தையும் காணவில்லையே. உணர்ச்சியற்ற பொம்மைபோலல்லவா நிற்கிறாள். வியப்புப் பன்மடங்கு பெருக அவளை நோக்குகிறேன்.

“உள்ளே வரலாமே.” அவள்தான் அழைக்கிறாள். முதன்முறை பழகும் ஒருவரை அழைப்பதுபோல் அழைக்கிறாள். அவள் அழைப்பின்மேல் படியேறி உள்ளே போகிறேன். எனக்கென்று எந்த எதிர்பார்ப்பையும் வைத்துக்கொள்ளாது அந்த ஓசையில் மயங்கி அவளின் நிழலாகிறேன். உள்ளே, அறையெங்கும் ஒரே சிற்பமும் சித்திரமும்தான். எல்லாம் மயங்கி உறங்குகின்றனவென்ற உணர்வை வெளிப்படுத்தின. இந்தப் பெரிய ஹோலில் நிலவி வழிகிற அமைதியூனூடே அவளை நின்றபடியே நான் நோக்குகிறேன். அவளிடமிருந்து குளிர்மையான இனிய வரவேற்பை எதிர்பார்த்துக்கொண்டு வந்த எனக்குப் பெரிய ஏமாற்றம். ஏதோ யந்திரமாகச் செயல்படுபவள்போன்று என்னை அழைத்துவிட்டு முகத்தில் எவ்வித உணர்வையும் வெளிப்படுத்த விரும்பாதவள்போல், சிந்தனையின் கீறல்கள் சிறிதும் படியாத முகத்தோடு விழிகளை மட்டும் என்மேல் பதித்து நிற்கின்ற அவளின் தோற்றத்தைக் கண்டு நான் மலைத்து நிற்கிறேன்.

இதுவரை வேறு எவரையும் இங்கு காணவில்லை. தனிமையான இந்த இடத்தில் தனிமையாக இந்த ஒருத்திதானா வாழ்கிறாள். என் சிந்தனை நீள நீள அவளுடைய உணர்ச்சியற்ற விழிகளும் என்னை நோக்கிக்கொண்டிருந்தன.

“மங்கை! என்னை நீ இன்னும் அடையாளம் கண்டுகொள்ளவில்லையா? இத்தனை நாட்களுக்குள் என் உருவம், அன்பு, நம்மைச் சுற்றி நிகழ்ந்த இனிய நிகழ்ச்சிகள் எல்லாம் உன் நினைவிலிருந்து அகன்றுவிட்டனவா? என்ன, எதுவுமே பேசாதிருந்துகொண்டு என்னைக் கலக்குகிறாயே, மங்கை.” அவளைத் தொட்டு உலுப்பாத குறையாகக் கூறுகிறேன்., என் குரலில் வேகமும் உறுதியும் படிப்படியாக அதிகரிக்கின்றன. கூடவே எதுவோ தொண்டையில் கரகரப்பதுபோன்ற உணர்ச்சியும் தோன்றுகிறது. என்னை அறியாது ஏற்பட்ட துயரத்தின் சாயலா இது?

மெள்ள உரிமையோடு அவளின் கையைப் பற்றுகிறேன். என் கையின் ஸ்பரிசத்தினால்தானோ என்னவோ அவள் விழிகளில் எங்கிருந்தோவொரு மாற்றம், விழியோரங்கள் நீரால் நிறைகின்றன. ஒரு சில வெம்மையான நீர்முத்துக்கள் என் கைமேல் விழுந்து தெறிக்கின்றன. நான் என்னை மறந்து அவளின் தோள்களைக் கையால் வளைத்துக்கொள்கிறேன். அவளுடைய பலமின்மையின் முன் மடிந்துபோன என் பழைய நினைவுகள் தலைதூக்குகின்றன. என் அணைப்பினிடையே நனைந்த விழிகளோடு என்னை நோக்குகிறாள். அவள் இதயமும் நனைந்திருக்கவேண்டும். இத்தனை நேரத்தின்பின் என்னை அறிந்துகொண்டவளாக இப்போதுதான் தென்படுகிறாள். அவள் இதழ்க்கடையில் அழுகை கலந்த புன்முறுவல் தவழுகிறது. “ஈஸ்வரி! என்று உணர்ச்சி ததும்ப அழைத்தபடி என்னை அணைத்துக்கொள்கிறாள். இந்த அணைப்பிலிருந்து விடுபட மனமோ முயற்சியோ இன்றி அதன் இனிமையை நுகர்ந்தபடி நான் அசைவற்று நிற்கிறேன். இத்தனை நாளும் நெஞ்சில் குமைந்துகிடந்த சுமையைக் கரைப்பதுபோல் அவள் விழிகளிலிருந்து நீர் பெருகுகிறது. அதன் ஈரம் என் உடையினூடே கசிந்து நெஞ்சின் சருமத்தில் ஊறுகிறது. அதன் வெம்மையைப் பொறுக்கமுடியாது புதைந்திருக்கும் அவள் முகத்தை உயர்த்துகிறேன். இதுவரை எவரிடமும் கூறாது பதுக்கி வைத்திருந்த தாப உணர்வெல்லாம் பொங்கி வழிகின்றன.

“மங்கை, இதோ பார், நீ இப்போதும் பழைய நினைவுகளை மீட்டு மீட்டுப் புலம்பிக்கொண்டிருப்பதை இனியும் என் மனம் பொறுக்காது. அவற்றையெல்லாம் உன் நெஞ்சிலிருந்து அகற்ற வேண்டுமென்ற ஆவலோடுதான் நான் உன்னிடம் வந்திருக்கிறேன். அவற்றை நினைத்து நாளும் பொழுதும் உருகிக்கொண்டிருக்கிறாயே இத்தனை பெரிய தியாக உள்ளம் உன்னிடம் இருக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவேயில்லை. இத்தனைக்கும் காரணமான நான் செய்த பிழையை மன்னிக்கமாட்டாயா? என் குரல் இறைவன் முன் குறையிரந்து வேண்டும் அடியவன்போல் கூனிக்குறுகி ஒலிக்கிறது.

“ஈஸ்வரி, ஏமாற்றத்தின் பிரதிபலிப்பாக என் வாழ்க்கை அமைந்துவிட்டது என்பது உண்மைதான். ஆனால் இது நீயோ நானோ செய்துவிட்ட குற்றமல்ல. எங்களுக்கும் அப்பாற்பட்ட சக்தியின் வேலை இது. அது ஒரு வேளை விதியாகவும் இருக்கலாம்.” என்று அவள் கூறியபடியே என் அணைப்பிலிருந்து விடுபட்டு யன்னலின் அருகே வந்து வெளியே மூடிக்கிடக்கும் இருளை நோக்கியவாறு நிற்கிறாள்.

“நாம் ஏமாறுகின்றபோதெல்லாம் விதியையே காரணம் காட்டித் தப்பித்துக்கொள்ளுதல் எவ்வளவுக்கு நியாயம்? உண்மையில் நடந்ததென்ன? அந்த நாட்களில் எவ்வளவு உயிருக்குயிராய்ப் பழகினோம். எவ்வளவு கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம். எங்கள் நட்பின் தூய்மையையும் பண்பையும் எவ்வளவு உயர்வாக நான் கற்பனை பண்ணிக்கொண்டேன். அது கடைசியில் எமக்கிடையில் எந்தவித ஒழிவு மறைவும் இல்லையென்று எண்ணி என்னையே நான் ஏமாற்றிக்கொண்டதாகத்தான் முடிந்தது. இதனால் உனக்கும் என் கணவருக்கும் இடையில் என் திருமணத்துக்கு முன் ஏற்பட்ட காதலை அறியமுடியாதிருந்தது. அத்தனை ரகசியமாக உயிர்ச் சினேகிதியாகிய எனக்கே சொல்லாமல் உனக்குள்ளேயே அந்தக் காதலை நினைத்து மகிழ்ந்துகொண்டிருந்தாயோ?

“எங்கள் நெஞ்சத்தில் இளமை நினைவுகள் முகிழ்த்த காலம் அது. அதையெல்லாம் எவ்வளவு அழகாக எழுதுவாய். அவற்றை அனுபவத்தில் காண்பதுபோல் நானும் கனவில் லயித்தபோது எங்கள் திருமணப் பேச்சு நடந்தது. திருமணத்தின்போது என் கணவரை நான் வணங்கி எழுந்தபோது தன் கையிலே என்னை ஏந்தி உற்று நோக்கினார். அப்போதும் அவரிடம் களங்கமற்ற குழந்தையின் முகத்தையே கண்டேன். இடையில் அவர் மிக மோசமான விபத்தில் அகப்பட்டு உயிர் பிரிகின்ற வேளையில் கண்ணீருக்கிடையில் உன் கதையை மிகுந்த உடல் வேதனைக்கிடையே கூறினார். ஆனால் உன்னை மறந்து என்னை மணக்கவேண்டி வந்ததற்கு என்ன காரணமோ அதை எனக்குக் கூறமுன் அவரின் உயிர் பிரிந்தது.

“ஆண்களின் மனம் சந்தர்ப்பத்துக்கேற்றவாறு மாறும். அதற்கேற்றவாறு பெண்களின் உள்ளங்களை விலை பேசுவார்கள். அப்போது இதையெல்லாம் நினைத்து நான் அழுதேன். உனக்காகவும் எனக்காகவும் அழுதேன். உனக்கு அவர் மீதிருந்த காதலை நான் முன்னரே அறிந்திருந்தால் அவரை மணக்க முன்வந்திருப்பேனா, மங்கை? இனிமையான உன் உள்ளத்தில் கசப்பான எந்த வித வித்தையும் ஊன்றிவிட முயற்சித்திருப்பேனா? பெண் வர்க்கமே சுயநலத்துக்காகப் போராடும் வர்க்கம் என்று சொல்வார்கள். இது நம்மளவில் எவ்வளவு உண்மையாகிவிட்டது. அந்தச் சுயநலத்துக்காகவே நாம் போராடினோம். கடைசியில் கண்டதென்ன? நீ அவரோடு கொண்ட காதலை உனக்குள்ளேயே நினைத்து மறுகுகிறாய். நானோ அந்த வாழ்வை எப்படியாவது மறக்கவேண்டுமென்று துடியாய்த் துடித்துக்கொண்டிருக்கிறேன்.

நீர் மல்கும் கண்களுடன் மங்கை திரும்புகிறாள். அவள் கண்கள் வெறுமையாய்ப் போய்விட்ட என் கழுத்தை நோக்குகின்றன. “ஈஸ்வரி, அந்த வாழ்வை நீ ஏன் மறக்கவேண்டும்? இருவருக்கும் இரிய வாழ்க்கை ஒன்று இருக்கிறது. கடந்துபோன வாழ்க்கை வெவ்வேறாக இருக்கலாம். அப்போதெல்லாம் நெஞ்சில் குதிரும் அழகிய சலனங்களிடையே மகிழ்ந்திருந்தோம். இனி அவற்றை நினைத்தபடியே உள்ளத்தால் வாழ்ந்துகொண்டிருக்கலாம். உடலால் வாழ்வதிலும் பார்க்க உள்ளத்தால் வாழ்வது எவ்வளவோ உயர்ந்தது அல்லவா?”

“இல்லை மங்கை. நீ சொல்வதெல்லாம் எனக்குப் பொருத்தமாக இருக்கலாம். உனக்கல்ல. ஏதோ வாழ்கையே வெறுத்துப்போனது போன்ற விரக்தியில் பேசுகிறாயே. எப்போதோ மங்கி மறைந்துபோன நாட்களிலே மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறவில்லையே என்ற ஏக்கத்தால் உன் இனிமையான எதிர்காலத்தையே வெறுக்கலாமா? நான் அவருடன் வாழ்ந்த இல்லற வாழ்வு ஒன்பதே மாதங்கள். அப்போது அது இனிய புதிய கதை. இப்போது புளித்துப்போன பழங்கதை. ஆனால் நீ நினைத்தால் உனக்கென்று ஒரு புதிய கதை காத்திருக்கும். ஆனால் அது என்னுடையதைப் போல் ஒரு சில மாதங்களுக்குள்ளே முடிந்துவிடக்கூடிய சிறிய கதையாக இருக்காது. நிச்சயம் அது மிக நீண்ட இனிய காவியமாக இருக்கும்.”

“ஈஸ்வரி, இது மாத்திரம் ஒருகாலும் என் வாழ்வில் ஏற்படமுடியாது. கடந்த இரு ஆண்டுகளும் எப்படிக் கழிந்ததென்றே எனக்கு நினைவில்லை. அவர் என் உள்ளத்தில் உருவாக்கிய காதல் உணர்வுகள் எவ்வளவு தூய்மையானவை. அதற்காக, அந்த ஒருவருக்காகவே என் இதய மலரை அர்ப்பணித்தேன். அந்த நினைவுகளுடனேயே இதுவரை வாழ்ந்தேனே, இனியா வாழமுடியாது? அந்த நினைவாகிய நீண்ட உறக்கத்திலிருந்து என்றுமே நான் விழிதெழ முடியாது, ஈவ்வரி.”

அவளிடமிருந்து வெளிவரும் தீர்க்கமான சொற்களினால் விடுபடமுடியாது நான் கட்டுண்டு நிற்கிறேன். அவளே வந்து என்னை ஆதரவுடன் அணைக்கிறாள். நிமிர்ந்து நோக்கும் எனக்கு கண்ணீரில் மிதக்கும் அவள் விழிகள் தென்படுகின்றன. வெளியிலே அழத்தெரியாத நான் நெஞ்சத்துக்குள்ளேயே ரகசியமாக அழுகிறேன். உள்ளத்தால் வாழ்கின்ற வாழ்க்கையின் ஆரம்பத்துக்கு இந்தக் கண்ணீர்தானா அடையாளம்?

தினகரன் வாரமஞ்சரி

1970

Dec 15, 2013

வேறும் மனிதர்கள்

[வீரகேசரி, 1978]

இரு மலர்க்கரங்கள் என்முன்னால் நீண்டன.

எனக்கு மிகவும் பழக்கமான கரங்கள்.

பால்போன்ற வெள்ளைக் காகிதத்திலான ஒரு உறை அந்தக் கரங்களைத் தொட்டிலாக்கி மெத்தெனப் படுத்திருந்தது. எழுந்து நின்று இரு கைகளாலும் பெற்றுக்கொண்டேன்.

நன்றி, சியாமளா. இப்படி உட்காருங்கள்.

சியாமளா என் எதிரேயிருந்த கதிரையில் அமர்ந்தாள்.

நான் இன்னும் அவள் முகத்தை நிமிர்ந்து நோக்கவில்லை. நோக்கவேண்டிய தேவையோ துணிவோ எனக்கு இருக்கவில்லை. அந்த முகத்தில் தொன்றும் அழகை ஆறுதலாய் நின்று பருகி அனுபவிக்கும் உரிமை என்னிடமிருந்து எப்போதோ கை நழுவிப்போனதொன்று. அழகை அதற்கென்ற உரிமையோடு அனுபவிப்பதில்தான் நியாயம் இருக்கிறது. கள்ளமாக எனக்குள்ளேயே அதை அசைபோடுவேனென்றால் அந்த அழகின் தூய்மைதான் குறைந்துவிடாதோ?

இது எனது திணைக்களத்தில் எனக்கென்று ஒதுக்கப்பட்ட தனி அறை. என் முன்னால் ஒரு பெரிய மேசை இருந்தது. பளிங்குபோல் வர்ணம் அடிக்கப்பட்ட மேசையில் எல்லாமே ஒழுங்காக இருந்தன. ‘பேப்பர் வெயிட் முதல் எல்லாமே ஒரு அமைதியான ஒழுங்கு. என்னையே நான் மாற்றிக்கொண்டபிறகு எனது சுற்றாடலையா மாற்றிக்கொள்ள முடியாது?

எனது எதிர்பாராத விருந்தாளியுடன் நான் இன்னும் எதுவுமே பேசவில்லை. சியாமளா என் பின்னால் இருந்த சுவரில் சாய்ந்து தொங்கிய ஒரு நவீன ஓவியத்தையோ அல்லது பக்கத்து யன்னலூடாகத் தெரியும் வானத்தில் வழுக்கியோடும் மேகச் சிதறல்களையோதான் அந்த ஓரிரு விநாடிகளுக்குள் பார்த்து நேரத்தைச் சமாளித்துக் கொண்டிருக்கவேண்டும். அவளுடைய முகத்தில் தோன்றிய அமைதியும் தூய்மையும் என் மேசையின் மேற்பரப்பில் துல்லியமாய்த் தெரிந்தன. அந்தப் பிம்பத்தில் நான் ஐக்கியமாகிவிட்டேன். அதன் பிரதிபலிப்புகள் என் நெஞ்சில் எத்தனை நளினமான மயக்கத்தை உணர்த்தினவோ! இதுவும் ஓரிரு விநாடிகளுக்குள்தான்.

“சத்யம்! இனிய நாத்த்தில் தோய்த்த ஒளிப்பிசிறுகள்...

அந்த அழைப்பு என்னுள் நிறைந்ததும் நான் நிமிர்ந்துகொண்டேன். அவள் குரலில் தோய்ந்திருக்கும் பிரேமையை என்னுடைய பெயரை அழைக்கின்றபோது மட்டுமே கேட்டு அனுபவிக்க முடியும். அத்தனை ஆழமாக, இதயத்தின் பரிபூரண நிறைவாய்ப் பரிணமிக்கக்கூடிய வேறு ஒரு சொல் எதுவும் அவளிடத்தில் கிடையாது என்பதை நன்கறிந்திருந்தேன். இந்த ஒன்றே என்னுடைய கர்வத்துக்குப் போதுமானது - ஒரு அழகிய, அறிவுள்ள பெண்ணின் காதலைப் பெற்றவன் என்ற கர்வம். அப்படி அவள் அழைக்கின்றபோது எனக்குள் ஏற்படும் ஒவ்வொரு கால அணுக்களையும் அனுபவிப்பதில்தான் நான் கொள்ளும் கர்வம் என்னிடம் இன்றிருக்கும் எல்லாக் கர்வங்களிலும் பார்க்க உயர்ந்தது.

அவளின் இதழ்கள் எதையோ கூறுவதற்குத் துடியாய்த் துடித்துக்கொண்டிருந்தனவென்றே நினைத்தேன். எனக்குள்ளேயிருந்த அத்தனை ஆவலையும் திரட்டி அவளை நான் நோக்கினேன். ஒரு கணத்துக்குள் ஆயிரமாயிரம் அர்த்தங்களைச் சிருஷ்டித்தபடி அவை அப்படித் துடித்தனபோல் தோன்றின. என் ஆவலின் உத்வேகம் அதிகரித்தது. ஆனால் அவளின் இரக்கமற்ற இதழ்கள் ஒரேயொரு புன்முறுவலோடு என் தாபத்தைச் சிதறடித்தன. நான் ஆண்மகன்; திரும்பவும் மௌனியாகிவிடலாமா? ஏதாவது பேசவேண்டும்; பேசி அவளையும் பேசவைக்கவேண்டும்.

“சியாமளா. உங்கள் முன்னால் இந்த உறையை நான் திறக்கலாமா? இப்போது அவள் இமைகள் மூடிக்கொள்ளச் சிரித்தாள். ஒளி சிந்தும் பற்கள் நிரையில் நின்று வெண்கோலமிட்டு விளையாடுவதுபோலிருந்தது.

அந்தச் சிரிப்புக்கு என்ன பொருள் இருக்கும்? இப்போதெல்லாம் அவளிடம் அந்தப் ‘பொல்லாத சிரிப்பை முழுமையாகக் காணமுடியாவிட்டாலும் என்னுடைய சில கேள்விகளுக்குப் பதில் கூறும்போது சொற்களுக்குப் பதிலாகச் சிரிப்பினால் அந்த விடையைப் பூரணப்படுத்தும் வேளையில் அந்தப் பொல்லாத்தனம் சிரிப்பின் ஓரிரு இடங்களில் எப்படியோ புகுந்துவிடும். ஒரு காலத்தில் அந்தச் சிரிப்பின் முழுமையான சிருங்காரத்தில் திளைத்து அதிலேயே நான் அமிழ்ந்து போனதற்காகவேனும் என் பிரியத்துக்குரிய அந்தப் பொல்லாத சிரிப்பின் ஒரு சிறு சிதறல்களையாவது இப்போது காட்டமாட்டாளா என்று நான் ஏங்கிப்போய்த் தவித்தேன்.

மூடிய விழிகளை நோக்கினேன், அவை மூடியபடியே இருந்தன.

என் விரல்கள் தாமாகவே உறையைப் பிரித்தன. பிரிக்கும்போது உறையின் முகப்பைக் கவனித்தேன். எனக்கு மிகவும் அறிமுகமான கையெழுத்துக்கள் – ஒரு குழந்தையின் பிஞ்சு உள்ளத்தில் எழும் ஞானச் சுடர் விரல்களின் வழியே ஊர்ந்து கோணலும் கோடுகளுமாக, ஒன்று இன்னொன்றை விழுங்கிவிடும் சிறுத்த, பருத்த உருவங்களாக உருப்பெறுவதுபோல் இருக்கும் எழுத்துக்கள் – எதுவுமேயில்லை. முகப்பு வெண்மையாய், வெறுமையாய்த்தான் இருந்தது.

என் விரல்களின் பிடிகளில் அகப்பட்டு, உறையின் ஓரங்களை உராய்ந்து நெருக்குண்டு, முதல் ஒரு பாதியும் பிறகு ஒரு பாதியுமாக வெண்ணிறத் தடித்த திருமண அழைப்யொன்று இரண்டாக மடிக்கப்பட்ட நிலையில் வெளிவந்தது. அதன் முகப்பில் பிணை மானொன்று தனியே நின்றபடி புல் மேய்ந்துகொண்டிருந்தது. சிறிய படம், மிகவும் வேலைப்பாடான அச்சடிப்பு. நான் அட்டையைப் பிரிக்காமலே அப்படத்தில் தோன்றிய குறைபாட்டை நினைந்து என்னையே வருத்திக்கொண்டேன். ஒரு பெண் மான் தனிமையில் நிற்பதா? இதைக் கண்டு யார் மனம்தான் வாடாது? அதை உருவாக்கிய கலைஞனின் கற்பனையில் இப்படியானதொரு சிறுமை தோன்றலாமா?

“சியாமளா, இந்தப் பிணையோடு ஒரு கலையும் சேர்ந்திருந்தால் இன்னும் எவ்வளவோ இயற்கையாக இருக்கும் இல்லையா? இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கக்கூடாது. ஆனால் அது அந்தக் கணத்தில் தவிர்க்கமுடியாமற்போய்விட்டது. சில விஷயங்களில் நான் அவசரப்படுவதிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது.

சியாமளா ஏனோ மறுபடியும் தலை குனிந்துகொண்டாள். “மிருகங்களிடமிருக்கும் அரிய பண்புகளோடு வெறும் மனிதர்களை நீங்கள் ஒப்பிடப்பார்க்கிறீர்கள், சத்யம். வழக்கமான அவளுடைய தர்க்க ரீதியான உரையாடல் இந்த இடத்தில் அவளையறியாமல்தான் வந்திருக்கவேண்டும். அதைத் தொடர்வதற்கும் அதிலிருந்து அவளின் புதிய கருத்துக்களுக்கு என்னிடமுள்ள தேவையைப் பூர்த்திசெய்வதற்கும் உண்டான சந்தர்ப்பத்தை நான் உடனேயே பயன்படுத்திக்கொண்டேன்.

வெறும் மனிதர்கள்! மனித உள்ளத்தால் என்றுமே அணுகிவிடமுடியாத ஆழ்ந்த பண்பின் செறிவை மிருகங்களிடம்தான் காணமுடியுமென்று எண்ணுகிறாளோ? எனக்குள்ளேயே நான் அசைபோட்டுக்கொண்டேன்.

“வெறும் மனிதர்கள் என்று குறிப்பிடுகிறீர்களே, பணமும் கல்வியும் மற்ற வாழ்க்கை வசதிகளும் இருந்தும் மனதால் வெறுமையாய்ப்போய்ப் பொருளற்ற லட்சியத்தைச் சுமந்துகொண்டு ஓயாது வாழ முனைபவர்களைத்தானே அப்படிக் கூறுகிறீர்கள், சியாமளா? நாம் இருவரும்கூட...

அவள் இப்போது என்னை நிமிர்ந்து நோக்கினாள். ஆழ்ந்த சமுத்திரப் பரப்பொன்று என் முன்னால் விரிந்து அதன் மத்தியில் சுழன்றோடும் நீரோட்டத்தில் என்னை முழுமையாய் விழுங்கிவிடுவதுபோன்று அந்த விழிகளில் என்னால் விளங்கிக்கொள்ளமுடியாத பல புதிர்கள் தொற்றி நின்றன. நான் என்றைக்குத்தான் அவளுடைய கேள்விக்கு முறையாகப் பதில் சொன்னேன்?

அவள் உள்ளத்தை நான் படிப்பதெல்லாம் அவள் பேசுகின்ற ஓரிரு விநாடிப் பொழுதுகளில்தான். அவள் மௌனமாய் இருக்கும் வேளைகளில் அது எப்படி முடிகிறது? நான்தான் பேசிக்கொண்டிருப்பேனே! ஆனால் சியாமளா இதற்கு நேர்மாறானவள். நான் மௌனமாய் இருக்கும் வேளைகளில் என் அந்தரங்கமெல்லாம் அவளுக்கு மனப்பாடமாகிவிடும். எந்தத் தலைபோகும் தனிப்பட்ட காரியங்களையும் அலுவலகத் தொந்தரவுகளையும் மறந்து அவள் முகத்தையே என் கண்கள் வட்டமிட, இம்மலர்க் கரங்களை எடுத்து என் கண்களில் மாறிமாறி ஒற்றி... ஓ, இக்கரங்கள்தானே அவை? அவற்றுக்கு நான் இன்னும் அந்நியனாகிவிடவில்லையே!

நான் உடனே எழுந்து நின்றுகொண்டேன். அவ்விழிகளிலும் என்னை நோக்கி உயர்ந்தன. எழுந்தாலும் நடந்தாலும் மறைந்தாலும் அவ்விழிகளின் வீச்சில் நான் வெந்து மடிந்துவிடவேண்டியதுதானா? கூரிய கத்தியால் என் இதயச் சதைகளைப் பயங்கரமாகக் கீறிவிடுவதுபோல் இந்தச் சந்திப்பு ஏற்படுத்திய வெம்மையைத் தகிக்கமுடியாது யன்னலை நோக்கித் திரும்பினேன்.

யன்னல் திரைச்சேலையின் மேலாக வேளியே நிமிர்ந்து நின்ற நகரத்தின் ஒரு பகுதி அன்றைய அவசர உலககைக் கண்டு அலுத்து ஓய்ந்த நிலையில் ஓய்வெடுக்க முனைந்துகொண்டிருந்தது. அந்த நாட்களிலும் இன்று போன்றே யோர்க் வீதியில் ஓய்வில்லாத சன நெருக்கடி. இங்கிருந்து நினைத்தாலே அந்த வீதியின் விசாலமும் சலசலப்பும் மனதைச் சுகப்படுத்தும். அச்சூழலைச் சாதகமாக்கிக்கொண்டு எங்கள் உரையாடலும் நெருங்கியபடியே இருவர் கைகளும் அடிக்கடி ஒன்றையொன்று அடிக்கடி உராய்ந்துகொள்ள, அந்த உராய்வின் ஸ்பரிசத்தில் ஏற்படும் மனக் கிளுகிளுப்போடு அந்த மனித நெரிசலினூடே ஒரே கதியில் வீதியைக் கடந்து ஓரமாய் நிற்கும் பஸ் தரிப்பிடத்துக்கு வரும் வரைக்கும் ஒரு தலைமுறைக்கால உறவையும் அதன் இனிமையையும் நாம் அனுபவிக்கத் தவறியதில்லை. அந்தச் சந்திப்புகளும் மங்கிய ஒளி சிந்தும் தேனீர்க்கடைகளின் மூலையில் மணிக்கணக்காக அமர்ந்து பேசித் தீர்த்தவையெல்லாம் இன்று வெறும் பேச்சாகிவிட்டனதானே!

ன்னலுக்கு அப்பால் நினைவுக்கு எட்டாத வெளியில் நினைவுக்கு எட்டும் நிகழ்ச்சிகள் முகிற் கூட்டங்களாக....

அதோ எவரையும் நிமிர்ந்து நோக்கவைக்கும் தோற்றத்தோடும் நெகிழ்ந்து பணியவைக்கும் உள்ளத்தோடும் எந்த உறவையோ உபகாரத்தையோ எதிர்பார்க்காமல் உதவுகின்ற நெஞ்சாக உட்கார்ந்துகொண்டிருக்கிறாரே, அவர்தான் மிஸ்டர் ரங்கநாதன். அவர் சியாமளாவுக்கு மாத்திரம் தந்தையல்ல, என்னைப்போல் உழைப்பால் உயரத்துடிக்கும் இளைஞர்களுக்கெல்லாம் தந்தை போன்றவரென்றுதான் சொல்வேன். நான் அவளைக் காணவேண்டுமென்று சென்று அதுவே அவரைக் காண்பதில் ஒரு நிறைவைக் காண்பதாக என்னை ஆக்கி அவரின் குடும்பத்தில் என்னை ஒருவனாக்கியது. என்றைக்கெல்லாம் அவரைச் சந்திக்க நேரிடுகின்றதோ அப்போதெல்லாம் இனியும் அப்படிச் சந்திக்கவேண்டுமென்று ஏக்கமே கொள்வேன்.

எனக்கும் கண்ணியமான அவர் குடும்பத்திற்கும் இடையேயுள்ள கடைசிச் சந்திப்பாக இது இருந்துவிடுமென்றோ அவர் உணர்ந்து நாளெல்லாம் ஊட்டி வளர்த்த எமது நட்பு ‘இதோ இல்லை என்று ஆகிவிடுமென்றோ எப்படி நான் அப்போது எதிர்பார்த்திருக்கமுடியும்?

தெருவிலும் திண்ணையிலும் அறிமுகமான நாலு மனிதர்களின் சாதாரணக் கண்கள் சந்தேகக் கண்களாக மாறிய பின்னரும் அதிலிருந்து எழுகின்ற அபிப்பிராயங்களுக்கு மதிப்பளிக்கவேண்டுமென்ற எண்ணம் சியாமளாவுக்கும் எனக்கும் உருவாகுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்க முன்னரே ரங்கநாதனின் ஆதரவான உள்ளத்தில் எனது அன்பை அடைக்கலமாக வைத்திருந்தேன். கடைசியில் அவருடைய உள்ளமே எவ்வளவு வேதனைக்கிடையில் இந்த முடிவை எடுக்கவேண்டி வந்திருக்குமென நினைத்து நானே அவருக்காக வருந்தினேன்.

அன்றைக்கு என் வரவை நோக்கித்தான் அவரும் சியாமளாவும் காத்திருந்தனர். ஆனால் அந்தச் சந்திப்பு நம் எல்லாருக்காகவும் ஏற்பாடு செய்த்துபோலவும் அதன் விளைவுகள் மட்டும் என் ஒருவனின் வாழ்விலேயே ஊன்றி நிற்பதுபோலவும் என் மனம் அலையுண்டது.

“சத்யம், எனது மகளின் மனதுக்கு நிறைந்தவராக நீர் கிடைக்கப்போகிறீர் என்பதிலும் பார்க்க உமது அறிவையும் திற்மையையுமே பெரிதாக நினைத்து எனக்குள்ளேயே மகிழ்ந்து கொண்டிருந்தேனே! இதையே இந்த உலகத்துக்குக் கூறிப் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாத அளவுக்கு இப்போது நான் கோழையாகிவிட்டேன்.

அப்படி அவர் கோழையாகவேண்டி வந்ததின் காரணம் எனக்கே தெரியுமே. அந்த ஒரு காரணத்தை எவரும் இலகுவாக மறந்துவிட முடியும் என்று நம்பித்தானே நான் அவர்களோடு உறவாடினேன். நான் ஒரு அநாதை என்ற உண்மை அப்படி என்ன பெரிய பிரச்சனை. அனால் நான் அநாதையாய்ப் போனதன் காரணமே அவர் கொழையாய்ப் போனதன் காரணமாகிவிட்டது. அவ்வளவுக்கு நான் ஆழ்ந்து யோசித்திருந்தால் அன்பு செய்தாலும் நான் ஏமாற்றப்படுவேன் என்று அப்போதே என்னால் உணர்ந்திருக்கமுடியும். அப்படிப் பலாத்காரமாக என் இளம் வயதில் புகுந்து என்னை அநாதையாக்கிய சம்பவங்களை அவருக்கு நானே ஒருமுறை கூறியிருந்தேன்.

நான் சிறுவனாகப் பெற்றோரோடு கிராமத்தில் வாழ்ந்தபோது அது நிகழ்ந்தது. எங்கள் வீட்டுக்கு மிக அருகேயிருந்த அயலவர்களுக்கிடையே திடீரென்று எழுந்த பூசலையும் அதில் என் தந்தையும் சம்பந்தப்பட்டு எங்கள் குடும்பமே கலங்கியதையும் என்னால் முற்றிலும் நினைவுக்க்குக் கொண்டுவர முடியவில்லை. அன்றைய இரவு எனது தந்தை தன் கோபத்தின் தீராப் பசியைத் தீர்ப்பதற்காக ஒரு உயிரையே பலிகொண்டு உதிரம் வழியும் கத்தியோடு வீட்டுக்கு வந்த தோற்றம் மட்டும் இன்றைக்கும் என் மனதில் பசுமையாக நிற்கிறது. அவரோடு கூடவந்த பழியும் பாவமும் எங்களோடு தங்கியிருக்க அவர் மட்டும் இரவோடு இரவாக எம்மைப் பிரிந்து சென்றதை நினைக்கும்போதும் அவரைப்போலவே நான் ஆகிவிடக்கூடாது என்று அஞ்சி அல்லும் பகலும் என்னை உருவாக்குவதற்கே தன்னை அர்ப்பணித்து மறைந்த அன்னையை நினைக்கின்றபோதுபோதும் இன்றும் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் என் தந்தையை சந்திக்கின்றபோதும்தான் நான் ஒரு அன்புக்கு ஏங்கும் அநாதை என்ற உணர்ச்சி என்னுள் மேலோங்குகிறது.

பிரத்தியட்ச வாழ்வில் அந்த நிலையை மறக்கவேண்டிக் கட்டாயப்படுத்தப்பட்டதே இந்தச் சியாமளாவால்தானே! இனியும் அநாதையென்ற அந்தப் பெயரையே நித்தியமாய் நான் பூண்டிருக்க இந்த உலகம் வற்புறுத்துகின்றது. ரங்கநாதனின் முடிவு இதன் அடிப்படையிலேயே எழுந்தது என்று அவர் கூறி எனக்குத் தெரியவேண்டிய தேவைதான் என்ன? என்றாலும் அவரின் ஆதரவான சொற்கள் வெறும் சொற்களல்ல.

“சத்யம், நீரும் நானும் சியாமளாவும் நினைப்பதுதான் இந்த உலகத்தின் நினைப்பு என்று நாம் எண்ணி ஏமாந்துவிடக்கூடாது. நாலு பேரின் கேள்விக்குப் பதில் சொல்லுகின்ற சக்தி நம்மிடம் இருக்கலாம். அதையே நிரந்தரமாக நாம் சொல்லிக்கொண்டிருக்கமுடியுமென்றால் அதை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு இந்தத் தலைமுறைக்கு அவ்வளவு ‘றிசெப்டிவ் மைன்ட் கிடையாது. இதை வரவேற்கும் நாலாவது மனிதரே இனிமேல்தான் பிறக்கவேண்டும்.

“காதல், பாசம் என்பவைபோன்ற மனம் விளைவிக்கும் உறவுகளுக்கு முன்னால் பலமிழந்து உயிரையே தியாகம் செய்கின்றவர்களைச் சாதாரண மனிதர் மத்தியில்தான் காணமுடியும். நீங்கள் இருவரும் படித்தவர்கள், எதையும் புரிந்துகொள்ளக்கூடியவர்கள்.

ன்று எனக்கு ரங்கநாதனுடனுள்ள தொடர்பே மனத்தளவில்தான். அந்த உயர்ந்த உள்ளத்தோடு சியாமளாவும் நானும் நிறையவே போராடியிருக்கலாம். அன்பு என்பது அஹிம்சையின் பாற்பட்டதேயொழியப் புரட்சியின் வடிவமல்லவே!

நான் யன்னலைவிட்டு மீண்டேன். அவளின் விழிகள் என்னை எவ்வளவு நேரமாக அளந்துகொண்டிருந்தனவோ! இனி நான் அந்தப் பார்வைக்குப் பணியவேண்டியதில்லையென்ற முடிவுடன் இருக்கையில் அமர்ந்தேன். அவள் எழுந்துகொண்டாள்.

“சத்யம், நான் போகிறேன்...இனிய நாதத்தின் ஒலிப்பிசிறுகள் வாசல் கதவுகளையும் தாண்டி மெள்ள மெள்ளக் கரைந்துகொண்டன.

சியாமளா சென்று மறைந்து எவ்வளவோ நேரம் வரைக்கும் அவளிருந்த இடத்தில் மேசையின் மேல் சிதறிப்போய்க்கிடந்த நீர் முத்துக்களை என் கண்கள் வேதனையுடன் வெறித்தவண்ணமிருந்தன.

Nov 26, 2013

வாழவிடுங்கள் எங்களை!

போதும்!
பேக்டரிப் பிட்டுக் குழல்களே
புகை எழுப்பியது
போதும்!

பாதாள வாய்க்காலிலும்
பின்வாசல் வழியாலும்
நாளெல்லாம் கழிக்கிறீர்கள் தீழ்ப்பு,
நாறிப்போகிறது சூழல்!

ஆதலால்
வாழப்போகும் சந்ததிக்காக உங்களுடன்
வழக்காட வந்திருக்கிறேன்.

மாந்தரின்
உயிருக்கு உலைவைத்தே
உயரப் பார்க்கிறீர்கள்
தேசத்தை வளர்ப்பதென்று
நாசத்துக்கு வழிவகுப்பதா?

இரசாயன வாயுக்களை
இரகசியமாய்ப் புதைப்பதற்கு
வானத்து வெளிகளையா
வாடகைக்கு எடுத்தீர்கள்?

அமில மழை பொழிந்து
பயிரெல்லாம் அழிகிறதே
ஒரு கணமாவது இந்த
உழவர்களின் உழைப்பை
எண்ணிப் பார்த்தீர்களா?

நன்னீர் வாவிகளில்
நஞ்சைக் கலக்கிறீர்கள்
ஏற்கனவே
செத்துப்போன மீன்களை நம்பியா
இந்த
மீனவர்கள் வாழுவது?

மாரிக் காடுகளை
மாளச் செய்கிறீர்களே
அருகிவரும் உயிரினங்கள் உங்கள்
அறிவுக்கு எட்டவில்லையா?

ஆற்றோரங்களிலும்
வாவிக் கரைகளிலும்
வாவென்று அழைக்கிறதே
வானவில்லின் வர்ண ஜாலம்
உங்கள் அழுக்கு நீர்
இவ்வளவுக்கு ஏன் அழகாய் இருக்கிறது?

காற்று ஏன் இன்று
கனத்துப்போனது?
என்
கண்களில் நீர் வடிந்து
செம்மை படர்கிறதே!

துருவத்து உறை நிலம் ஏன்
தூர்ந்து போகிறது?
துரவக் கரடிகள் ஏன்
அழிந்து போகின்றன?

வானத்தின் குரல்வளையை
வலிதாய் நெரிக்கிறீர்கள்
மூச்சுத் திணறுவது
முதலில்
மரங்களும் செடிகளும்
மழலைகளுமே என்பதை
மறந்தா போனீர்கள்?

மரங்களைப் பாருங்கள்
மலர்களைப் பாருங்கள்
தென்றலை எம்மீது பூசும்
தூரிகைகளல்லாவா அவை?

ஆறுகளைப் பாருங்கள்
ஏரிகளைப் பாருங்கள்
மழைத்துளிகளை எம்மீது தடவும்
மயிலிறகுகளல்லவா அவை?

வானம் இருமுகிறதே
ஏனென்று கேட்டீர்களா?
பூமி சுடுகிறதே
போய்த் தொட்டுப் பார்த்தீர்களா?

அங்கே பாருங்கள்
ஆழியின் மட்டம்
ஓங்கி வளர்கிறது.
எந்த நேரமும் அது
கரைகளை விழுங்கலாம்,
தேசங்களின்
வரைபடங்களைத்
தலைகீழாய் மாற்றலாம்.

தொழில் வளர்ச்சி அவசியமே,
யார் இல்லையென்றார்கள்?
வேலை வாய்ப்பும் வேண்டியதே
வேண்டாமென்றா சொல்கிறோம்?

ஆதலால்
பேக்டரிக்கு உள்ளே மட்டுமன்றி
பேக்டரிக்கு வெளியேயும்
புதுமைகளைச் செய்யுங்கள்
உற்பத்திக் கழிவிலிருந்து
அற்புதங்கள் செய்யுங்கள்!
புகைக்குப் பதிலாகப்
புன்னகையைத் தவழவிடுங்கள்!
@@@@

நன்றி: காற்றுவெளி, கார்த்திகை 2013 இதழ்