ஆயுபோவன்,[1]
கிருஷ்ண பரமாத்மாவே - உலகில்
அதர்மம் தலையெடுக்கும்போது
அப்பாவி மக்களைக்காக்க
அவதாரம் எடுப்பீராமே?
முந்திய அவதாரத்தில்
அரசியல்வாதியாக இருந்தீரோ?
அதுதான் உன்
வாக்குறுதியை
வானில் பறக்க விட்டீராக்கும்!
நீர்
மறு அவதாரத்தை
மறந்ததால்தான்
காடையர்களும் கோத்தபாயாக்களும்[2]
கண்ணீர்த் தீவில்
கடை பரப்பத் தொடங்கினார்கள்.
உமது இடத்தை நிரப்ப
இன்று இங்கே
எண்ணற்றோர் அன்றாடம்
எடுக்கிறார்கள் அவதாரம்,
அறியாமலிருக்கிறாயா?
உபதேசம் செய்வது
எப்போதுமே சுலபம், கண்ணா
எனவே
இவர்களை இப்போதே
வதை செய்யும்
இல்லையேல்
கீதையை உபதேசித்தது
புத்தர்தான் என்று
புதுக்கதை கட்டுவார்கள்.
------
1. சிங்களத்தில்வணக்கம்.
2. இன்றைய ஸ்ரீ லங்காசனாதிபதியின் தம்பி
எப்போதோ பதிவு செய்திருக்கவேண்டும். இது சுருக்கிய வடிவம்.
அதர்மம் தலையெடுக்கும்போது
அப்பாவி மக்களைக்காக்க
அவதாரம் எடுப்பீராமே?
முந்திய அவதாரத்தில்
அரசியல்வாதியாக இருந்தீரோ?
அதுதான் உன்
வாக்குறுதியை
வானில் பறக்க விட்டீராக்கும்!
நீர்
மறு அவதாரத்தை
மறந்ததால்தான்
காடையர்களும் கோத்தபாயாக்களும்[2]
கண்ணீர்த் தீவில்
கடை பரப்பத் தொடங்கினார்கள்.
உமது இடத்தை நிரப்ப
இன்று இங்கே
எண்ணற்றோர் அன்றாடம்
எடுக்கிறார்கள் அவதாரம்,
அறியாமலிருக்கிறாயா?
உபதேசம் செய்வது
எப்போதுமே சுலபம், கண்ணா
எனவே
இவர்களை இப்போதே
வதை செய்யும்
இல்லையேல்
கீதையை உபதேசித்தது
புத்தர்தான் என்று
புதுக்கதை கட்டுவார்கள்.
------
1. சிங்களத்தில்வணக்கம்.
2. இன்றைய ஸ்ரீ லங்காசனாதிபதியின் தம்பி
எப்போதோ பதிவு செய்திருக்கவேண்டும். இது சுருக்கிய வடிவம்.
No comments:
Post a Comment