Mar 5, 2016

ராஜாஜி ராஜகோபாலனின் முதல் சிறுகதை நூல் குதிரை இல்லாத ராஜகுமாரன்

Theliwattai Joseph
Veerakesari
January 23, 2016

30 வருடங்களுக்கு மேலாக கனடாவில் வசிக்கும் ராஜகோபாலன் பேராசிரியர் சிவத்தம்பியின் ஊர்க்காரர். கரவெட்டி மண்ணின் மைந்தன். கனடா வாசியானாலும் தனது ஊர்ப்பற்று பற்றி அவரே இப்படிக்கூறுகின்றார். நேற்றைய தலைமுறையைச் சேர்ந்த நான் பல காலம் ஊரில் வாழ்ந்தவன் என்று சொல்வதிலும் பார்க்க ஊரோடு வாழ்ந்தவன் என்று சொல்வதில் தான் பெருமை கொள்கின்றேன். நான் நேசிக்கும் இந்த மண்ணின் மக்களுடைய அன்றைய கால வாழ்வின் ஒவ்வொரு அங்கங்களிலும் அவர்களுடன் கூடப் பயணித்திருக்கின்றேன். பிறந்து வளர்ந்து படித்த நாட்டை விட்டேகிய பிறகும் இந்த மக்களுடன் என் மனம் இன்றும் இறுக ஒன்றிப் போயிருப்பதற்கு இந்த ஊர் மண்ணின் வாசனைதான் காரணம் என்பேன். (இந்தத் தொகுதியின் என்னுரை)
இவர் எழுபதுகளில் எழுத்துலகப் பிரவேசம் செய்தவர் என்பதும் வீரகேசரி, தினகரன், அலை, மல்லிகை போன்ற ஏடுகளில் இவருடைய கதைகள் வெளிவந்தன என்பதும் குப்பிளான் ஐ.சண்முகனின் முன்னுரை மூலம் தெரிய வருகின்றன. இத்தொகுதியின் கதைகள் எதிலும் அந்தக் கதை வெளிவந்த ஆண்டோ கதை வெளிவந்த பத்திரிகை பற்றிய தகவலோ இடம்பெறவில்லை. தன்னூர்க்காரரும் நண்பருமான குப்பிளான் சண்முகத்திடமே விடாப்பிடியாக நின்று முன்னுரை பெற்றுக் கொண்டதாகவும் குறிக்கின்றார்.
ராஜாஜி ராஜகோபாலன். ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னரேயே என்னோடு அறிமுகமானவர். இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒரே கிளையிலேயே பல ஆண்டுகளாக இணைந்து பணி புரிந்தோம் என்று தனதுரையை ஆரம்பிக்கின்றார் குப்பிளான் சண்முகன். ராஜகோபாலனது கவிதை நூல் ஒரு வழிப்போக்கனின் வாக்கு மூலம் 2014 இல் வெளி வந்துள்ளதாகவும் முன்னுரையில் குறிக்கின்றார் இவர்.
இந்த நூலை நாகர்கோவில் சுதர்சன் புக்ஸ் வெளியிட்டுள்ளது. காலச்சுவடு பதிப்பகத்தின் இன்னொரு இணைப்பதிப்பகமே சுதர்சன் புக்ஸ் என்பது நூலாசிரியரின் உரை மூலம் தெரிய வருகின்றது. 15 சிறுகதைகள் கொண்ட இத்தொகுதி ஈழத்துச் சிறுகதைத் துறைக்கும் தமிழ்ச்சிறுகதைத்துறைக்கும் ஒரு நல்ல படைப்பாளியை அடையாளம் காட்டி நிற்கிறது என்பதை தயக்கமின்றி கூறலாம். ராஜாஜி கோபாலனது இயற்கையான எழுத்தின் வளம் பாத்திரங்களின் ஊடாக அதை அழகுற வடிவமைத்துக் கொள்ளும் நுட்பம் போன்ற பல அம்சங்கள் இந்த அடையாளப் படுத்தலை அதற்கான தகுதியை உறுதி செய்கின்றன.
தன்னுடைய கதை மாந்தர்கள் பற்றி அவர் குறிப்பிடுவதை சற்றே கவனிப்போம். ஒவ்வொரு கதையிலும் வரும் மாந்தர்கள் குணங்களும் குற்றங்களும் உள்ளவர்கள். ஏனெனில் அவர்கள் எனது காலத்தில் என்னோடு வாழ்ந்த என்னைப்போன்ற சாதாரண மனிதர்கள். அவர்கள் தம் வாழ்வில் வெளிப்படுத்திய காதல், நட்பு, தியாகம் போன்ற உணர்வுகளை அடுக்கியே இக்கதைகளைக்கட்டி எழுப்பியிருக்கின்றேன். இக்கட்டுமானத்தில் காதலையும் காமத்தையும் அளவுக்கதிகமாக அள்ளி மெழுகி இடுகின்றேன் என்ற வாதங்கள் எழவும் கூடும். மனித வரலாறு காதலையும் காமத்தையும் பற்றித்தானே பெரும்பாலும் பேசுகிறது. இவை இரண்டும் இல்லாமல் மனித வாழ்க்கை எவ்வாறு ஆரம்பிக்கும் என்று கேட்கிறேன். இக்கதைகளில் வரும் மனிதர்களோடு நான் கைகோர்த்து உலாவியதைப் போலவே நீங்களும் உலாவ வேண்டும் என்றும் உணர வேண்டுமென்றும் விரும்பினேனேயன்றி என் எழுத்தால் உங்கள் மனதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றோ சமுதாயத்துக்கு ஏதேனும் படிப்பினையைப் புகட்ட வேண்டுமென்றோ அவர்களை உங்களுடன் நான் பேசவைக்க விரும்பவில்லை. மாறாக நான் அந்த மண்ணில் ஒருக்கால் வாழ்ந்து அனுபவித்த சூழலையும் இன்று நீங்கள் அங்கே இன்னும் ஒரு முறையாவது வாழக்கிடைக்க வேண்டுமென அவாவுறும் சூழலையும் எமக்கு உவப்பான மொழியில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் என்கின்றார்.
இந்தக்கூற்றும் கூட படைப்பு இலக்கியத்துக்கான அவருடைய முக்கியத்துவத்தை இனம் காட்டுவதாகவே அமைகின்றது. இந்தப் 15 கதைகளில் 14 கதைகள் யாழ்ப்பாணத்தமிழ் மக்களின் வாழ்வியலைக்குறிப்பவை.
தலைப்புக்கதையான குதிரை இல்லாத ராஜகுமாரன் என்ற கதையானது அதில் வரும் விஜயா என்ற யாழ்தேவி ரயில் பெண் தன்னுடைய 32 வயதிலும் இன்னும் தன்னை பெண் பார்க்க வந்து போய்க் கொண்டிருப்பவர்களைப் பற்றிய நினைவலைகளில் மூழ்கி நிலை குலைவதை அழகாகக் காட்டுகிறது. கொழும்பு கோட்டையில் ரயில் ஏறி யாழ்ப்பாணத்தில் இறங்குகையில் கதையும் முடிகிறது.
வாசிப்பவனை அலுப்படையச் செய்யாமல் கதையுடன் கூட்டிச்செல்லும் இலாவகமான எழுத்து வன்மை கொண்டவர் இக்கதாசிரியர்.
முதல் கதையாகிய மேலும் சில கேள்விகளில் வரும் பவானி மகள் ஸ்ருதி கறுத்தக்கொழும்பானில் வரும் சண்டைக்கார சரசுவதி என்று அனைவருமே யாழ்ப்பாண மண்ணின் சாதாரண மனிதர்கள்தான்.
குப்பிளான் ஐ. சண்முகன் இந்தத்தொகுப்பில் உள்ள கதைகளில் எனக்குப் பிடித்தமான கதைகள் இரண்டு என்கின்றார். ஒன்று ஆத்மார்த்தமான தத்துவத் தேடல்களைக் கொண்ட அலையில் வெளிவந்த விழிப்பு மற்றது புதிய வாழ்வியல் சூழல் பற்றியதான அந்த ஒருவனைத்தேடி என்ற இரண்டும். அந்த ஒருவனைத்தேடி கதையின் களம் யாழ்ப்பாணம் அல்ல அமெரிக்கா என்றாலும் பாத்திரங்கள் யாழ்ப்பாணத்தவர்கள்தான்.
நீண்ட நெடுங்காலமாக மகளுக்கு மாப்பிள்ளை தேடும் கனடாத் தம்பதியினரின் கதை. 30 வருடங்களுக்கு மேலாக கனடாவில் வாழும் ராஜகோபாலன் அங்குள்ள தமிழர் வாழ்வியலை வைத்து எழுதியுள்ள ஒரே கதை இது என்கிறார் குப்பிளான்.
பெண்ணின் தகப்பனார் வரப்போகும் புதிய மாப்பிள்ளையின் குடும்பம் பற்றி பெருமையடிப்பதை கதாசிரியர் இப்படி எழுதுகின்றார். இவையள் எங்கடை ஊர் ஆக்கள். முப்பது நாப்பது வருசத்துக்கு முந்தியே கனடாவுக்கு வந்திட்டினமாம். வந்த காலத்திலயிருந்தே வான் கூவரில் தான் இருக்கினமாம். டொராண்டோ சனங்களைப் போல் முட்டையிலை மயிர் புடுங்குற ஆக்கள் இல்லையெண்டு அறிஞ்சவன் நான்.
யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் கோலங்களை அலாதியான வர்ணனைகளுடனும் நுட்பமான அவதானிப்புடனும் தனக்கேயுரிய தமிழ் நடையிலும் எள்ளலும் காதலும் கனிவும் ததும்பும் சொற்சித்திரங்களுடனும் கதை மாந்தர்களின் உரையாடல்களில் இயல்பாகவே இடம்பெறும் பிரதேசப் பேச்சு வழக்கில் வாசகர் மனம் கட்டுண்டு வாசிப்புச் சுகத்தை முழுமையாக நுகரும்படி நுட்பமாகக் கதையை நகர்த்திச் செல்லும் உத்தியில் ராஜாஜி கவர்ச்சியான தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றார். என்னும் பதிப்புரைக் கூற்று முற்றிலும் உண்மை வெறும் புகழ்ச்சியல்ல என்பதை இவரை வாசிக்கும் அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.
தேடி வாசிக்கப்பட வேண்டிய ஒரு நூல் இது.

சிம்மாசனத்தைப்பிடித்த குதிரையில்லாத ராஜகுமாரன்

Ezha Vaani
November 22, 2015

கடந்த மாதம் கொழும்புத்தமிழ் சங்கத்தில் பிரமிள் சிறப்பிதழாக வெளிவந்த மகுடம் விமர்சனக்கூட்டத்திற்கு அந்தனிஜீவாவின் அழைப்பில் தற்செயலாகச் சென்றேன். அந்த கூட்டத்தில் கனடாவில் இருந்து வந்திருந்த எழுத்தாளர் ராஜாஜி ராஜகோபாலன் எனக்கு அறிமுகமானார். அன்று நான் அந்த இதழைப்பற்றி பேச இருந்ததால் தன்னுடைய மகுடத்தில் வெளியான சிறுகதையான ''குதிரை இல்லா ராஜகுமாரன்'' பற்றியும் சில வார்தைகள் பேசச்சொன்னார். ஆனால் நான் அந்தக் கதையைப் படிக்காததால் அதுபற்றி எதுவும் கூறவில்லை.
அவர்கொணர்ந்திருந்த கமாரா வால் என்னையும் சில புகைப்படங்கள் பிடித்து எனக்கு அனுப்பியும் வைத்தார்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சிறுகதைத்தொகுப்பை என்னிடம் கொடுத்தார், பின் என்ன நினைத்தாரோ தெரியாது அதை மறுபடி தன் பைக்குள் வாங்கிப்போட்டுக்கொண்டு சென்றுவிட்டார் குதிரையில்லாத ராஜகுமாரனாய்.
பின்னர் சிலவாரங்களுக்கு முன் முதுபொரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் ஐயாவைச் சந்தித்தது பற்றியும் அவருடைய மகுடத்தில் வெளியான சிறுகதை பற்றியும் ஒரு சிறுகுறிப்பு இட்டிருந்தேன். அதைப்படித்த ராஜாஜி நல்லதோ கெட்டதோஎனது சிறுகதை பற்றியும் ஒரு குறிப்பு போடுங்கள்என்றார். இந்த மனிதர் என்னடா நம்மை கட்டாயப்படுத்துகிறாரே என அவர் கதையைப்படிக்க எனக்குப் பிடிக்கவில்லை.
சில நாட்களுக்கு முன் தொடர் மழையினால் குதிரை இல்லாத ராஜகுமாரனைப் படித்தேன்.
நான்கூட சில தடவைகள் யோசித்திருக்கிறேன். சந்திக்கின்ற பார்க்கின்ற முதல் தடைவையிலேயே குறிப்பிட்ட சில ஆண்களைப் பிடித்துப்போகும், நீண்டகாலம் பழகிய உணர்வுதோன்றும் பழகுவதற்கு விருப்பமாக இருக்கும், ஆனால் நாம் முதலில் போய் பேசிப்பழகினால் கேவலமாக புரிந்துகொள்வார்கள் என பின்வாங்கிக்கொள்வது. அந்த பிடித்த ஆணை கண்காணிப்பது தொடர்வது, அவனைப்பற்றிய நினைவுகளில் லயிப்பது எல்லாமே.
பெரும்பாலும் எல்லா தமிழ்பெண்களுக்கும் ஏற்படுகிற இந்த உணர்வை வெளிப்படுத்துவதே இல்லை
இப்படி ஒரு பெண் தான் சந்தித்த ஒரு ஆணை தனக்குப் பிடித்தமாக்கி அவனைத்தொடருவதும் பின் பேசி உடனேயே தன்னை ஒப்புக்கொடுப்பதும் அவனை வீடு வரை அழைப்பதும் அவன் மறுத்ததும் ஏங்கி நிற்பதும் என ஆழமாக இயல்பான ஒருபெண்ணின் மனதை ஊடுருவிப் பயணித்திருக்கிறார். உண்மையிலேயே அற்புதமாக தந்திருக்கிறார்.
இப்படித் தரமான கதைகளைததேர்ந்து பிரசுரிக்கிற மகுடம் இதழுக்கும் ஆசிரியர் மைக்கல் கொலின் ற்கும் நன்றிகள்.

ராஜாஜி ராஜகோபாலனின் 'குதிரையில்லாத ராஜகுமாரன்' பற்றிச்சில குறிப்புகள்...

Giritharan Navaratnam 
November 19, 21015

ராஜாஜி ராஜகோபாலனின் சிறுகதைத்தொகுப்பான 'குதிரையில்லாத ராஜகுமாரன்' படித்தேன். இன்னும் முடிக்கவில்லை. ஆனால் தொகுப்பில் நான் வாசித்த கதைகளின் அடிப்படையில் என் கருத்துகளை இங்கு பதிவு செய்கின்றேன். தொகுப்பினை முழுமையாகப்படித்த பின்னர் என் முழுமையான கருத்துகளைப் பகிர்ந்துகொள்வேன். நான் வாசித்த சிறுகதைகளின் அடிப்படையில் என் கருத்துகளைப் பற்றிப்பின்வருமாறு கூறுவேன்:

நான் வாசித்த கதைகளில் மிகச்சிறந்த சிறுகதைகளாக நான் கருதுவது 'பத்தியம்' மற்றும் 'கடவுளும் கோபாலபிள்ளையும்' ஆகிய கதைகளைத்தாம். 'பத்தியம்' ஆயுர்வேத வைத்தியர் மயில்வாகனம் அவர்களைப்பற்றியது. கதையில் ஒன்றிற்கும் அதிகமான இடங்களில் ஆயுள்வேத வைத்தியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பரியாரியார் அல்லது வைத்தியர் மயில்வாகனம் என்றழைக்கப்படும் ஆயுர்வேத வைத்தியரின் இன்றைய நிலை 'மேனாட்டு' வைத்திய முறையின் காரணமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் , வறுமையில் அவர் வாடுகின்றார். அவ்விதம் வாடும் நிலையில், அவரிடம் அவரது ஊரைச்சேர்ந்த இரு இளைஞர்கள் வருகின்றார்கள். எதற்கு? கொழும்பில் வேலை பார்க்கும் அவர்கள் , விடுமுறைக்காக ஊருக்கு வருகின்றார்கள். வந்தவர்கள் விடுமுறைக் காலத்தைச்சிறிது நீட்டி விட்டார்கள். அதற்குக்காரணத்தைக்கூற வேண்டுமே? அதற்காக ஆயுர்வேத வைத்தியரிடம் ஒரு 'மெடிக்கல் ரிபோர்ட்' காசு கொடுத்து வாங்க வருகின்றார்கள். ஆனால் அவர்களோ தமது நோய்களுக்காக ஆங்கில வைத்தியத்தை நாடுபவர்கள் என்பதை அறிந்ததும் மயில்வாகனத்தார் ' சேர்ட்டிபிக்கட்டை நம்பி வந்தால் போதுமோ? வைத்தியத்தை நம்பியல்லோ வரவேணும்" என்கின்றார். அதற்கு அவர்கள் காசு எவ்வளவென்றாலும் தரத்தயார் என்கின்றார்கள். அதற்கு அவரோ "அது எனக்குத்தேவையில்லை. நான் வைத்தியத்துக்கு மாத்திரம் காசு வாங்குவன். போட்டு வாருங்கோ" என்று கூறி அனுப்பி விடுகின்றார். ஒரு சிறுகதைக்குரிய அம்சங்களுடன் , நவீனத்தொழில் நுட்பம் எவ்விதம் பாரம்பரியத்தொழில் நுட்பத்தினைப் பாதிக்கின்றது என்பதை எடுத்தியம்பும் 'பத்தியம்' அதே சமயம் வைத்தியர் மயில்வாகனத்தாரின் தன் தொழில் மீதான பக்தியினையும், கொள்கைப்பிடிப்பினையும் எடுத்துக்காட்டுகிறது. வறுமைப்பிடியில் வாடும் சமயத்தில் கூட அவர் பணத்துக்காகத் தன் னை விற்றுவிடவில்லை. கதை 'டாக்டர் மயில்வாகனம் புரண்டு படுத்தார்' என்று ஆரம்பமாகின்றது. ஆயுர்வேத வைத்தியரான, பரியாரியான மயில்வாகனத்தாரை வைத்தியர் மயில்வாகனத்தார் புரண்டு படுத்தார் என்று ஆரம்பித்திருக்கலாமென்று தோன்றியது. ஆங்கில வைத்திய முறையினை எதிர்ப்பவர் அவர். அவரை அறிமுகப்படுத்தும்போது ஆங்கிலத்தைத் தவிர்த்திருக்கலாமே.

இந்தக்கதையினை வாசித்ததும் பரியாரியார் மயில்வாகனத்தாரின் இன்றைய நிலையும், அவரது தொழில் பக்தியும், மன உறுதியும் வாசிப்பவர் நெஞ்சில் தொடர்ந்தும் இருந்து விடுகின்றன. ஒரு சிறுகதை இவ்விதம்தான் இருக்க வேண்டும். அந்தக் கதை வெளிப்படுத்துவது ஒரு பொருளாக இருக்கலாம் அல்லது உணர்வாகவிருக்கலாம் , அவற்றை அக்கதை வாசித்து முடித்ததும் வாசிப்பவர் உள்ளங்களைப்பாதிக்கும் வகையில் அந்த வெளிப்படுத்தலிருக்க வேண்டும். இந்த அடிப்படையில் 'பத்தியம்' சிறக்கிறது. வைத்தியரின் முடிவு காலத்துக்கொவ்வாத 'பைத்தியக்காரத்'தனமாக இருந்தாலும், அந்தப் 'பைத்தியக்'காரத்தனமே 'பத்திய'த்தின் வெற்றிக்கும் காரணமாக இருந்து விடுகின்றது.

எனக்குப்பிடித்த அடுத்த சிறுகதை 'கடவுளும் கோபாலபிள்ளையும்'. சிறுகதையின் தலைப்பு புதுமைப்பித்தனின் புகழ் பெற்ற சிறுகதைகளிலொன்றான 'கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்' கதையினை ஞாபகப்படுத்தும். கதையின் நாயகன் மாலை வேலை முடிந்து மாலைப்பொழுது அவருக்கு வழங்கிய சுதந்திரத்தை இரசித்தபடி வீடு திரும்புகின்றார். திரும்பியவருக்கு மனைவி தேநீர் கொண்டுவந்து தருகின்றாள். வேலைப்பளு தந்த சுமையிலிருந்து மீண்டிருந்த கணவரின் மகிழ்ச்சிக்குரிய காரணத்தை அறியாத மனைவி 'என்ன சிரிப்பு வந்ததும் வராததுமாய்' என்று கேட்கின்றாள். 'அட கடவுளே! இதையெல்லாம் கருத்திலெடுக்கலாமா?' என்கின்றார். அவர் அவ்விதம் கடவுளே என்ற சொல்லினைக்கூறியதால், எதற்காக அவர் கடவுளைக்கூப்பிட்டார் என்று அறிந்து வர கடவுளின் முகவர் (Agent) வந்து விடுகின்றார். புவியில் சனப்பெருக்கம் அதிகமாகிவிட்டதால் எல்லா அழைப்புகளுக்கும் உடனுக்குடன் வந்து அருள்பாலிக்கக் கடவுளுக்குச் சிரமம் என்பதால் , கடவுளும் தனக்காக இவ்விதம் அழைப்பவர்களிடம் சென்று தன் சார்பில் அருள்பாலிக்க முகவர்களை வேலைக்கு வைத்திருக்கின்றார். இவ்விதம் கதை சுவையாக, நகைச்சுவைத் தொனியில் செல்கிறது.

கடவுளின் முகவருக்கும், கதையின் நாயகனுக்குமிடையில் நடைபெறும் உரையாடல் சுவையாகச் செல்கிறது. கடவுளின் முகவரிடத்தில் கதாநாயகன் தான் கடவுளைச்சந்தித்தால் கேட்கவிருந்த கேள்விகளையெல்லாம் கேட்கின்றார். அவர் எவ்விதமிருப்பார்? அவர் ஆணா? அல்லது பெண்ணா? என்ற கேள்விக்குக் கடவுளின் முகவர் அவர் மாபெரும் சக்தியின் வடிவம் என்கின்றார். மேலும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாத கடவுள் எதற்காக தனது படைப்பில் ஆணுக்கு மட்டும் பெண்ணை விட அதிக உரிமைகளை வழங்கினார் என்று கதாநாயகன் கேட்கின்றார். அதற்குக் கடவுளின் தூதுவர் " ஆண் பெண்ணிடமிருந்து அவர்களது உரிமைகளைப் பறித்துக்கொண்டான்" என்கின்றார். அது ஒருவகையில் உண்மைதான். மானுடரின் வளர்ச்சிப்போக்கில் ஆரம்பத்தில் தாய்வழிச்சமுதாயங்கள் நிலவியபோது ஆண் பெண்ணுக்கு அடங்கியல்லவா இருந்தான். பின்னர் குடும்பம், சொத்துரிமை போன்றன உருவாகியபொழுதுதானே ஆண் பெண்ணையும் படிப்படியாகத் தன் அடிமையாக மாற்றிக்கொண்டான். இவ்விதம் ஆரம்பத்தில் நியாயமான பதிலினை வழங்கிய கடவுளின் முகவரை, கதாநாயகன் மேலும் பல கேள்விகளால் திக்குமுக்காட வைத்து விடவே, அவர் ஆளை விடு என்று பறந்தோடி விடுகின்றார். ஆனால் உண்மையில் கடவுளின் முகவர் அவ்விதம் பறந்தோடியிருக்கத் தேவையில்லை. அவரிடம் கதாநாயகன் கேட்ட கேள்விகள் எதற்காக மானுடர்கள் மத்தியில் வர்க்க வேறுபாடுகள், தீண்டாமை போன்ற பிரச்சினைகளைக் கடவுள் உருவாக்கினார் என்னும் அர்த்தத்தில் அமைந்திருந்தன. அதற்குக் கடவுளின் தூதுவர் 'இந்த வேறுபாடுகளை மக்களல்லவா ஏற்படுத்திக்கொண்டார்கள். கடவுளை எதற்காகக் குறை கூற முடியும்?' என்று பதிலிறுக்கின்றார். சரியாகவே கடவுளின் தூதுவர் பதிலளித்திருக்கின்றார். ஆனால் கதாநாயகனோ 'இந்த யுகத்து இன்னல்களைத்தீர்க்கப்படைத்தவனுக்கு வழி தெரியவில்லை என்று நழுவுபவர்தான் கடவுள் என்கின்றீர்களா?' என்று பதில் கேள்வி கேட்கவே, கடவுளின் தூதுவர் துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று தோன்றிய வேகத்திலேயே மறைந்து விடுகின்றார்.

'வரம் கொடுக்கும் வல்லமை கடவுளிடம் வற்றி விட்டது. மனிதர்கள் இனிக் கடவுளைத்தமக்குள் தேட வேண்டும்.' என்று கதையினை முடிக்கின்றார். கதாசிரியர். இந்தக்கதையில் கடவுளின் தூதரின் பதில்கள் சரியாக இருந்தாலும், அவருடனான தர்க்கம் சிறப்பாகப்படைக்கப்பட்டிராதபோதிலும், இக்கதை எனக்குப் பிடித்துப்போனதுக்குக் காரணம் கடவுளின் முகவர்தான். பொதுவாகக் கடவுள்தான் கண் முன்னால் தோன்றி அருள் பாலிப்பார். ஆனால் இங்கு படைக்கப்பட்டுள்ள கடவுளின் முகவர் பாத்திரம் கதாசிரியரின் கற்பனைச்சிறப்பினைக்காட்டுகிறது. கதையினை வாசித்து முடிந்தும் கூட சிந்தனையில் கடவுளின் தூதுவர் நிலைத்து நின்று விடுகின்றார். அதுதான் கதையின் வெற்றி.

வாசித்த கதைகள் சிலவற்றின் எதிர்மறையான அம்சங்களாக நான் பின் வருவனவற்றைக் கூறுவேன்:

1. சில சிறுகதைகள் கூறும் பொருளுக்கும் , அவற்றின் தலைப்புகளுக்கும் தர்க்கரீதியிலான பொருத்தங்கள் ஏதுமிருப்பதாகத்தெரியவில்லை.

2. சில சிறுகதைகளின் முடிவுகள் சப்பென்று, எந்தவித வீச்சினையும் தராத நிலையில், தொய்வாக முடிந்திருக்கின்றன. சிறுகதையொன்றினை வாசித்து முடிக்கும்போது ,அக்கதை கூறும் அடிப்படையான பொருள் அல்லது உணர்ச்சி , நெற்றியில் வந்து அறைய வேண்டும். அவ்விதமற்று ஏனோ தானோவென்று முடிந்திருக்கின்றன.

 உதாரணமாகத் தொகுப்பின் அட்டைப்படக் கதையினைப் பார்ப்போம்.'குதிரை இல்லாத ராஜகுமாரன்' கதையின் தலைப்பு. கதையின் நாயகி கொழும்பில் வேலை பார்ப்பவள் வீடு திரும்பிக்கொண்டிருக்கின்றாள். முப்பது வயதினைத்தாண்டியவள். நூறாவது தடவையாக அவளைப்பெண் பார்க்க ஒருவர் வரவிருப்பதால் அவள் ஊர் திரும்பிக்கொண்டிருக்கின்றாள். இம்முறை பெண் பார்க்க வரவிருப்பவருக்கு வயது நாற்பதைத்தாண்டி விட்டது. புகை வண்டியில் அவள் தன்னிலும் ஓரிரு வயதுகள் குறைந்த இளைஞனொருவனைச்சந்திக்கின்றாள். அவனது குணவியல்புகளில் தன்னை மறந்த அவள் அவன் தனக்குக் கணவனாக வந்தால் என்று கனவுகளில் மூழ்குகின்றாள். புகை வண்டியிலிருந்து இருவரும் ஒரே பஸ்ஸில் தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றார்கள். அவனை அவள் வீட்டுக்கு அழைக்கின்றாள். அவன் மறுத்து விடுகின்றான். பின்னர் அவள் மணமாகிக் கொழும்பு திரும்பும்போது சந்திக்கலாம்தானே என்கின்றான். அவள் கவலையுடன் பஸ்ஸிலிருந்து இறங்கி செல்லும் பஸ்ஸையே பார்க்கின்றாள். அவனுக்குத் தன் மனதை இன்னும் சிறிது திறந்து காட்டியிருக்கலாம் என்று நினைக்கின்றாள். அவ்விதம் திறந்து காட்டியிருந்தால் அவன் தன்னுடன் வீடு வந்திருக்கக்கூடுமென்று எண்ணுகின்றாள். இவ்விதம் சிறிது சலிப்பும், துயருமுற்றவளாக வீட்டினுள் நுழைய முன்னர் மீண்டும் பஸ் சென்ற திக்கை நோக்குகின்றாள். 'தூரத்து முடக்கில் அவன் திரும்பி வருவது தெரிந்தது' என்று கதை முடிகின்றது. 

இந்தக்கதையின் தலைப்பு 'குதிரை இல்லாத ராஜகுமாரன்'. இந்தச்சிறுகதையில் குதிரை இல்லாத ராஜகுமாரன் யார் என்ற கேள்வி வாசிப்பவர்களுக்கு எழக்கூடுமல்லவா? அதற்கு ஆசிரியர் கதையின் இடையில் ஒரு பதிலும் வைத்திருக்கின்றார். கதையின் நடுவில், அவளைப்பெண் பார்க்க வந்து செல்லும் வரன்களைப்பற்றிக் கதாசிரியர் கீழுள்ளவாறு கூறுவார்:

 "..என்னை இதுவரை பார்க்க வந்தவர்கள் வாசலைக்கடந்து வீட்டினுள்ளே நுழையும்போது மட்டும் தாம் ஏறிவந்த வெண் குதிரையைத்தெருவில் நிறுத்திவிட்டு வந்த ராஜகுமாரன்போல் அட்டகாசத்துடன் நடந்துகொள்வார்கள்..."

இதன்படி அவர்கள் எல்லாரும் குதிரைகளுள்ள ராஜகுமாரர்கள்தாம். ஆனால் குதிரைகளை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு நுழையும் ராஜகுமாரர்கள். 'குதிரை இல்லாத ராஜகுமாரன்' என்று தலைப்பு இருக்கிறதே என்று வாசகர்கள் சிறிது குழம்பலாம். ஒருவேளை கதையின் முடிவில் பஸ்ஸிலிருந்து இறங்கித் திரும்பும் வாலிபன் தான் அந்தக் குதிரை இல்லாத ராஜகுமாரனோ? என்றும் சிந்தனையினை ஓட விடலாம். ஏற்கனவே வந்து அவளை நிராகரித்தவர்கள் யாவரும் குதிரைகளுள்ள ராஜகுமாரர்கள்தாம். ஆம்! வாசலில் தம் குதிரைகளை நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழையும் ராஜகுமாரர்கள்தாம். ஆனால் இந்த இளைஞனே குதிரையில்லாத ராஜகுமாரன். குதிரையில்லாத ராஜகுமாரன் எவ்விதம் வருவானோ அவ்விதமே , அடுத்த தெருவில் பஸ்ஸுலிருந்தும் இறங்கி அவளை நாடி வருகின்றான். இவ்விதமாகக்கதாசிரியர் தர்க்கித்தால் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

இவ்விதம் இன்னுமொரு கதையான 'ஆதலினால் காமம் செய்வீர்' சிறுகதையினையும் குறிப்பிடலாம். இதில் வரும் நாயகனுக்கு ஆண்மைக்குறைபாடு. இதனை உணர்ந்த அவனது காதலி அவனை விட்டுச் செல்கின்றாள். ஏன் முதலிலேயே அவன் தனது குறைபாட்டினைக் கூறவில்லை என்று கேள்வி எழுப்புகின்றாள். இந்நிலையில் மனமுடைந்த நாயகன் தற்கொலை செய்ய முடிவு செய்து தூக்கில் தொங்குகின்றான். தூக்கில் தொங்கும் அவனை அவனது நண்பனொருவன் காப்பாற்ற முனைகின்றான். அச்சமயத்தில் அவனுக்கு உதவியாக மேலுமிரு கைகள் நீளுகின்றன. அவை நாயகனின் காதலியின் கைகள் என்று கதை முடிகின்றது. சிறுகதை கூற வருவது என்ன? தலைப்புக்கும், கதையின் முடிவுக்கும் சம்பந்தமேயில்லையே.

இவ்விதம் நான் வாசித்த தொகுப்பின் கதைகளில் சில வாசித்து முடிந்ததும் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தாத வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றின் முடிவுகள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளவை போன்ற உணர்வினை வாசிப்பின் முடிவில் நான் அடைந்தேன். ஆனால் நான் ஆசிரியரின் பலமாகக்கருதுவது அவரது எழுத்து நடையினைத்தான். சுவையாகக் கூறும் ஆற்றல் மிக்க நடை. இதழ்களுக்கிடையில் மெல்லிய புன்னகையினை ஏற்படுத்தும் இனிய நடை. இந்த நடை கை வரப்பெற்ற ஆசிரியர், கதையின் கூறு பொருளிலும் மிகுந்த கவனத்தைச்செலுத்தினால் 'பத்தியம்', 'கடவுளும் கோபாலபிள்ளையும்' போன்ற கதைகள் பலவற்றைத்தர முடியும்.

தொகுப்பின் ஏனைய கதைகளையும் வாசித்த பின்னர் அவை பற்றிய என் கருத்துகளையும் கூறுவேன்.

ராஜாஜியின் ராஜகுமாரன்

Srikandarajah கங்கைமகன்
November 13, 2015

கடந்த சில மாதங்களுக்கு முன் என்னைப்பற்றிய ஓர் அடையாள அறிமுகம் சிறிலங்கா தொலைக் காட்சியில் தூவாணம் என்ற நிகழ்வில் இடம்பெற்றிருந்தது. அதைப் பார்த்த நண்பர் ராஜாஜி அவர்கள் கங்கைமகனுக்கு ஏன்; அறிமுகம் என்று அந்த நிகழ்வின் பின்னூட்டத்தில் எழுதி இருந்தார். உலகளாவிய ரீதியில் வெளியீடு செய்யப்படவுள்ள இவரது நூலை நான் ஆய்வு செய்ய வேண்டும். அதனூடாக உலகத்து மக்கள் என்னை அறிந்து கொள்ளட்டும் என்று அவர் நினைத்தாரோ என்னவோ. வாழ்த்துக்கள். இருந்தும் அவரது வெளிச்சத்தில் விழும் நிழலுக்குள் என்னையும் நான் தேடிப்பார்க்கின்றேன்;.
.
ஈழத் தமிழன் தன் இருப்புகளைத் தொலைத்துவிட்டு இருப்பவற்றைக் கட்டிக்காப்பாற்றிக் கொள்ளத் தனக்கென்று ஓர் முகமூடியை அதுவும் அரை விலைக்கு வாங்கி அணிந்துகொண்டு உலகம் முழுக்க அங்கலாய்த்துக் கொண்டு திரியும் காலமிது. நாட்டை இழந்து, மொழியை மறந்து, உறவுகளைப் பிரிந்து இழக்க ஒன்றுமே இல்லாத நிலையில் வெளிநாட்டுத் தமிழர் தாம் வாழ்வை நினைக்காமல் வேரறுந்த விழுதுளாய் வாழத் தொடங்கிய புலம்பெயர் வாழ்வில் குன்றின் விளக்காய்ச் சில மனிதர்கள் .ராஜாஜி அவர்களைப்போல் வாழத்தான் செய்கின்றார்கள்.
.
தன்னைப் பலவீனப் படுத்தியாவது மற்றவர்களின் பலத்தை முன்னுக்குக் கொண்டுவரும் ஆற்றல் மிக்கவர் நண்பர் ராஜாஜி அவர்கள் என்பதனை அவரது எழுத்துகளில் மட்டும் அல்ல நேரடி வாழ்விலும் கடைப்பிடிப்பவர் என்பதனைப் பலவடிவங்களில் பலரிடம் வெளிப்படுத்தி இருப்பதைப் பார்த்துள்ளேன். 40 வருட அவரது இலக்கிய வாழ்வில் 4 வருடங்களுக்குக்குறைவாகவே என்னுடன் அறிமுகமாகியவர் இந்த நூலாசிரியர்.
.
தனக்கே உரிய பாணியில் கதைகள் சொல்லுவது ஒரு வகை.. பிறருக்கு உகந்த பாணியில் சொலலுவது இன்னொரு வகை. ஆனால் இரண்டையும் குழைத்து இன்றைய உலகிற்கு ஏற்ற பாணியில் சொல்லி இருப்பது அனைத்தும் அவரது 7ம் அறிவியல் சார்ந்த அனுபவ உண்மைகள் ஆகும். .
.
.மனம் திறத்தல், மனம் திருப்புதல் என்ற உளவியல் கோட்பாட்டின் அடிப்படையில் அவரது ஆழ்மனது அவரிடமே தமிழ்ப் பிச்சைகேட்டுக் கேட்டு இந்த இராஜ குமாரனை வெளிக் கொண்டு வந்திருதுக்கின்றது. இவர் கடன்பட்டது தமிழிடம் என்றால் அந்தமொழி இவரிடம் தன்னை அழகு படுத்தியது இந்தச் சிறுகதைத் தொகுப்பில்தான்.
.
.மானுட மனத்தின் மற்றடற்ற விருப்புக்களைக் கட்டற்ற தேவைக்குள் ஈர்த்துககொண்ட நடைமுறைச் சமுதாயத்தின் ஒவ்வொரு நிலைகளையும் நுணுக்கமுறக் கண்டறிந்து ஆக்கமுற்று ஆர்ப்பரிக்கின்றது இந்த முத்து. காலத்தை இவர் எழுதி வரலாற்றை வாழவைபதைப்போலவே வரலாறும் தன் காலத்தில் இவரது எழுத்துக்களை நிட்சயமாக வாழவைக்கும்.
.
கடல் கடந்தான் தமிழன், கற்பூர தீபம் கண்டான் .இறைவன் என்பதுபோல விட்டகுறையையும், தொட்ட குறையையும் தொடர்ந்து தாம் வாழும் நாட்டில் கட்டிக்காப்பவர்கள் தமிழர்கள். அந்த வகையில் ஈழத்தில் விட்ட எழுத்தின் குறையைத் தான் வாழும் கனடிய நாட்டில் தொடரந்து செய்பவர். அப்பால் விடுபட்டுப்போன எழுத்து வடிவங்களையும், பேச்சு வடிவங்களையும் நடைமுறையில் அமைத்துக் காட்டி வாசிப்பவர்களை ஈழத்தின் அந்தந்த இடங்களில் உட்காரவைத்து விருந்து படைத்திருக்கும் இந்த எழுத்தாளன் பழமை பேணுவதற்குள் சென்று புதுமைகளை மெதுமையாகக் காதலி காதிற்குள் சொல்லும் இரகசியம்போல் இனிப்பாக்கியுள்ளார். அதனால் நூலைத் திறந்ததும் மூடமனமின்றி விரித்தபடி வைத்துவிட்டு, வந்துவந்து பார்த்தபடி வாசித்தும் பழக்கப்பட்டவன் நான்.
.
எதிரிகள் விடும் அம்புகளுக்காய் இவரும் எதிர்த்து அம்புகள் செய்வதில்லை. மாறாகக் கேடையங்களைச் செய்து தன்னையும் பாதுகாத்து எதிரிகள் இருந்தால் அவர்களையும் இன்முகம் காட்டி நண்ராக்குவதே இவரது பெருங்குணம். உள்ளங்களைக் கவர்ந்து நண்பர்களையும் , கலை, இலக்கிய அன்பர்களையும் தன்சிறையில் எப்பவும் பத்திமாக வைத்திருப்பவர்.
.
.இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் அத்தனை சிறுகதைகளும் உலகியல் வாழவின் வழுமியங்களோடு தங்களை இணைத்துக்கொண்டு தடங்கலற்றுச் செல்கின்றன. கிராமம், சமூகம், உறவுகள் தத்துவங்கள் எனச் சமூக அங்கங்களைக் கிளைபிரித்துக் காடட்டி ஒவ்வொரு கிளைக்கும் மகுடம்சூட்டி மக்களை இனம்காண வைத்துள்ளார் இந்த எழுத்தாளர்.
.
.காதல் இரசனையை வள்ளுவர் அனிச்சத்திற்கு ஒப்பிட்டார். ஆனால் இந்த எழுத்தாளர் அதைவிட மென்மையாகப பல இடங்களி;ல பல பக்கங்களை எம்மைத் தன்னுடன் நகர்த்தியுள்ளார். தையல்போட நூல் கிடைக்காத வறுமையின் அடிமட்டத்தில் தன் கிழிந்த பாவாடைக்கு முடிச்சுப் போட்டுக் கிலுட்டு மூக்குத்தியைக் கடற்கரையில் தொலைத்துக் காதல் கொண்டவர்கள் இன்றும் அந்த மணணில் மிகவும் சந்தோஷமாக வாழ்கின்றார்கள்.
.
.அடுப்படி ருசியும், அரிசிப்பல் சிரிப்பும் காட்டிக் காப்புக்கைச் சாப்பாடும், சங்கத் தமிழ் சொன்ன களவியற் பண்பிற்குச் சற்றும் மாறாது அகத்திணை ஒழுக்கங்களை அள்ளி வீசும் ஆற்றலை எழுதுவதில் இவரிடம் தோற்றவர்கள் ஏராளம். தன் முகவுரையில் காதலையும், செக்சையும் அள்ளி மெழுகிகிருப்பதாகப் பலர் பேசக்கூடும் என்று எழுதியிருக்கின்றார். என்னைப் பொறுத்த வரையில் அது சலனம் இன்றியே கதைகளில் பயணிக்கின்றன என்பதுவே உண்மையாகிறது.
.
தன் அனுபவங்களைப் பெரிசுபடுத்திக் கொள்ளாமல் "குதிரை இல்லாத ராஜகுமாரன்" என்ற சிறுகதையில் ஒரு தலைமைப் பாத்திரத்தை அவன் என்று அழைக்கின்றார். இந்த அவன் யாராகஇருக்கும் என்று யோசித்துப் பாரத்தேன். அது இவராகத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு......அதில் வரும் அவன் புகையிரதம் வெளிக்கிட்டதும் ஓடி வந்து ஏறுகிறான் என்று குறிப்பிட்டிருப்பார். அந்தக்காலத்தில் கொழும்பில் அப்படிப் பிசியாக இருந்தவர் இவராகத்தான் இருக்க முடியும். இதன் காரணங்கள் இவர்தான் அந்த ராஜகுமாரனோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. இன்னொரு கதையில் வரும் இவன் என்பதுவும் அவர்தானோ?
.
.இந் நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கதைகளில் இருந்தும் சிலவற்றை உதாரணமாகக் கூறிக் காட்டுவது மற்றைய கதைகளின் தரத்தைக் குறைத்துவிடும் என்று வாசகர்கள் எண்ணிவிடலாம் என்பதற்காக முழு நூலின் பண்பையும் எனதுபோக்கில் உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
.
கங்கைமகன் என்பது ஒரு பல்கலைக் கழகமாக இருந்தால் ஒவ்வொரு கதைக்கும ஒவ்வொரு முனைவர் பட்டத்தைப் பெறும் தகுதியைத் திரு ராஜாஜி ராஜகோபாலன் அவர்கள் பெற்றிருப்பார் என்பது வெள்ளிடை மலையாய் நிமிர்ந்து நிற்கின்றது. ஒரு மனிதனின் ஆக்கம் ஒருவனை மனிதன் ஆக்கும் என்ற எனது கருத்துப்படி இவரது கதைகள் பலரை மனிதர்கள் ஆக்கும் என்பதுவே எனது எண்ணமாகும்.
.
.இது எனது முடிந்த அளவிலான ஆய்வே தவிர முழுமையான ஆய்வு அல்ல என்பதனை எனது கருத்தாகவைத்து இவர் மேலும் பல நூல்களை வெளியிட்டுத் தரணியில் தனியிடம் பெறவேண்டும் என்பதுவே என் பேரவாவாகும்.
.
அன்புடன்
கங்கைமகன்
14.11.2015