Oct 3, 2013

பருத்தித்துறை வடை



பருத்தித்துறை வடையே – வடலிப்
பனங்கள்ளுக்குத் துணையே
சந்தியிலே கடையே – பத்துச்
சதத்துக்கொரு வடையே!
ஸொய்... ஸொய்... ஸொய்...!

ஆச்சியின் உள்ளங்கையில் மாவானாய்
அடுப்பினிலே கொதிக்கும் நெய்யில் பொன்னானாய்
பருப்புகளை நொருக்கும்போது பாகானாய்
பல்லிடுக்கில் புகுந்துகொண்டால் நோவானாய்!

பருத்தித்துறை வடையே...

வயிரவரின் கழுத்தில் தொங்கும் உழுந்து வடை
வடலியிலே ஏற்றம்தரும் ஆச்சி வடை
கடற்கரையில் வாங்கித்தின்போம் கடலை வடை
கோப்பறேசன்* வாசலிலே பழைய வடை!

பருத்தித்துறை வடையே...

பெட்டியிலே போட்டு வைத்தால் கல்லாகும்
போத்தலிலே மூடி வைத்தால் முறுக்காகும்
சுட்டவுடன் சுவைத்தாலே சொர்க்கமன்றோ – கள்ளுக்குச்
சுதிசேர்க்கும் வடை ருசிக்கு இணையுமுண்டோ!

பருத்தித்துறை வடையே...

---------------

பருத்தித்துறை வடை



பருத்தித்துறை வடையே – வடலிப்
பனங்கள்ளுக்குத் துணையே
சந்தியிலே கடையே – பத்துச்
சதத்துக்கொரு வடையே!
ஸொய்... ஸொய்... ஸொய்...!

ஆச்சியின் உள்ளங்கையில் மாவானாய்
அடுப்பினிலே கொதிக்கும் நெய்யில் பொன்னானாய்
பருப்புகளை நொருக்கும்போது பாகானாய்
பல்லிடுக்கில் புகுந்துகொண்டால் நோவானாய்!

பருத்தித்துறை வடையே...

வயிரவரின் கழுத்தில் தொங்கும் உழுந்து வடை
வடலியிலே ஏற்றம்தரும் ஆச்சி வடை
கடற்கரையில் வாங்கித்தின்போம் கடலை வடை
கோப்பறேசன்* வாசலிலே பழைய வடை!

பருத்தித்துறை வடையே...

பெட்டியிலே போட்டு வைத்தால் கல்லாகும்
போத்தலிலே மூடி வைத்தால் முறுக்காகும்
சுட்டவுடன் சுவைத்தாலே சொர்க்கமன்றோ – கள்ளுக்குச்
சுதிசேர்க்கும் வடை ருசிக்கு இணையுமுண்டோ!

பருத்தித்துறை வடையே...

---------------

காதலிலிருந்து கவிதைக்கு


உல்லாசம் என்ற சொல்லை
உருக்கித் தட்டி
மினுக்கிப் பார்த்தால்
இளைஞன் என்று வருமல்லவா?

அதுபோல் –

கனவு, கண்கள்
தோல்வி, தாடி
என்பவற்றை
இறுக்கி முறுக்கி
இணைத்துப் பார்த்தால்
காதல் என்று வருமல்லவா?

மேலும் –

காதல் என்ற சொல்லிலிருந்து
தோல்வி என்ற சொல்லைக்
கூட்டிக் கழித்துப்
பெருக்கிப் பிரித்துப் பார்த்தால்
கவிதை என்று வருமல்லவா?

-------

காதலிலிருந்து கவிதைக்கு


உல்லாசம் என்ற சொல்லை
உருக்கித் தட்டி
மினுக்கிப் பார்த்தால்
இளைஞன் என்று வருமல்லவா?

அதுபோல் –

கனவு, கண்கள்
தோல்வி, தாடி
என்பவற்றை
இறுக்கி முறுக்கி
இணைத்துப் பார்த்தால்
காதல் என்று வருமல்லவா?

மேலும் –

காதல் என்ற சொல்லிலிருந்து
தோல்வி என்ற சொல்லைக்
கூட்டிக் கழித்துப்
பெருக்கிப் பிரித்துப் பார்த்தால்
கவிதை என்று வருமல்லவா?

-------

சுடலை ஞானம்


நல்லவனென்று பெயரெடுக்க
நாளெல்லாம் முயன்று பார்த்தேன்,
இறக்கப்போகும் வயதில்தான்
உண்மையை அறிந்துகொண்டேன்.
நல்லவற்றைச் செய்துதான்
நல்லவனாக வேண்டியதில்லை.
கெட்ட செயலெதுவும்
செய்யாதிருந்தாலே போதும்,
நல்லவனென்ற பெயர்
நாளடைவில் வந்துவிடும்!

---------

சுடலை ஞானம்


நல்லவனென்று பெயரெடுக்க
நாளெல்லாம் முயன்று பார்த்தேன்,
இறக்கப்போகும் வயதில்தான்
உண்மையை அறிந்துகொண்டேன்.
நல்லவற்றைச் செய்துதான்
நல்லவனாக வேண்டியதில்லை.
கெட்ட செயலெதுவும்
செய்யாதிருந்தாலே போதும்,
நல்லவனென்ற பெயர்
நாளடைவில் வந்துவிடும்!

---------

Oct 2, 2013

இப்போ நீ சட்டம் படிக்கிறாயாம்!


இப்போ நீ
சட்டம் படிக்கிறாயாம்
உருண்டையான உலகம் இனி
இதயம்போல் ஆகிவிடும்.

நீதிபதிகள்
சட்டப் புத்தகங்களைச்
சாக்கடையில் வீசிவிட்டு
கவிதைப் புத்தகங்களைக்
கமக்கட்டுக்குள் வைத்திருப்பர்.

சட்டத் தரணிகளுக்கு
வழக்கு வேட்டை இனியில்லை
சட்ட அலுவலகமெல்லாம்
புத்தகக்கடை ஆகிவிடும்.

நீதிமன்றங்களுக்குக்
கட்டிடம் தேவையில்லை
கடற்கரையிலும் கடைவீதியிலும்
தெருக்களிலும் பூங்காக்களிலும்
காதல் நீதி
கொலுவைக்கத் தொடங்கிவிடும்.

உலகப் படத்தில்
கோடுகள் உண்டென்றால்
ஆறுகளும் மலைகளும்தான்
நாடுகள் இருந்தால்தானே
கோடுகள் பற்றிப் பேசுவது.

உலகம் முழுவதும்
ஒரு நாடு ஆகிவிடும்
பேசப்படும் ஒரே மொழி
காதல் மொழியாகிவிடும்.

காமத்துப் பாலைத்தான்
குடும்பச் சட்டம் என்பாய்.
பொருட் பாலைத்தான்
அரசியலமைப் பென்பாய்.

சிலப்பதி காரத்தில்
சிவில் சட்டம் இருக்குதென்பாய்
தொல் காப்பியந்தான்
சர்வதேசச் சட்டமென்பாய்.

ஐ நாவுக்கு உன்னைச்
செயலாளர் ஆக்கினால்
உலக ஐக்கியம்
ஒரு நொடியில் வந்துவிடும்!
_____